தொண்டர் படையில் சேர யாழ் இளைஞர்கள் முண்டியடிப்பு !
28 April, 2014 by admin
இராணுவத்தின் தொண்டர் படையில் வேலைக்கு சேர்கின்றமைக்கு யாழ். மாவட்ட இளையோர்கள் பல நூற்றுக் கணக்கில் முண்டி அடித்து செல்கின்றமையை அவதானிக்க முடிகின்றது. ஈழ உணர்வு இணையத்தளங்களும் ஊடகங்களும் இதற்கு கடும் எதிர்பை வெளியிட்டுள்ளபோதிலும், முதலாம் கட்ட ஆட்சேர்ப்பு கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளது என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இளையோரும், இவர்களின் பெற்றோரும் ஈழ உணர்வு பிரசாரங்களை பெரிதாக பொருட்படுத்துவது போல் தெரியவில்லை. கடந்த மாதம் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட நூற்றுக் கணக்கான இளையோர்களுக்கு துறை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது.
இது பலாலி படைமுகாமில் வைத்தே வழங்கப்பட்டு வருகிறது. இராணுவத்தின் தொண்டர் படையணிக்கு, யாழ் இளைஞர்கள் முண்டியடித்துச் செல்வதைப் பார்க்கும்போது, அங்கே என்ன நடக்கிறது என்று எண்ணத்தோன்றுவதாக யாழில் உள்ள சில உணர்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளார்கள். தொண்டர் படையில் இணையும் ஒருவ்வொரு இளைஞருக்கும் தலா 30,000 ஆயிரம் மாதம் வழங்கப்படுவதாகவும், இது ஒரு அரசாங்க உத்தியோகம் என்றும் ஆசையூட்டப்பட்டு வருவதாக மேலும் அறியப்படுகிறது.
இலங்கை உட்பட 21 நாடுகள் பாலியல் வல்லுறவை ஆயுதமாக கையாண்டன !
28 April, 2014 by admin
பாலியல் வன்முறைகள் தொடர்பாக ஆராயும் ஐ.நா. பொதுசெயலாளரின் சிறப்புப் பிரதிநிதி, சான்னாப் ஹவா பங்குரா அந்த அறிக்கை தொடர்பாக அறிவித்துள்ளார். நியுயோர்க்கில் வைத்தே அவர் இந்த அறிக்கை தொடர்பில் அறிவித்தார். யுத்தம் நடைபெறும் நாடுகளில் மிகவும் மோசமான முறையில் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதாகவும், ஆண்களும் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் இலங்கையின் இறுதிக்கட்ட போரில் இடம்பெற்ற பாலியல் வல்லுறவுகள் குறித்து கவலை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை இலங்கையை மேலும் சங்கடத்தில் ஆழ்தியுள்ளது.
Geen opmerkingen:
Een reactie posten