UN உறவில் மாற்றமில்லை! பலமான உறவு பேணப்படும்: ஜீ.எல்.பீரிஸ்
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொறிமுறைமை மற்றும் மனிதாபிமான விவகாரங்களில் இலங்கை முக்கியமான பங்களிப்பினை வழங்கி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைத் தீர்மானத்தை நிராகரித்ததன் மூலம் சர்வதேசத்துடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டு விட்டதாக அர்த்தமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளை விடவும் மோசமான அமைப்பே பொதுபல சேனா: ரிஷாத்
இவ்விடயம் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், சிறுபான்மையினரின் அடையாளங்களையும் மதங்களையும் அழிப்பதுடன் சிறுபான்மையினருக்கு இந்த நாடு சொந்தமில்லை. இது ஒரு பெளத்த நாடு என்று தெரிவித்து வந்த பொதுபல சேனா அமைப்பினர் இப்பொழுது அவர்களது இனத்துடனேயே மோதுகின்ற நிலை உருவாகியுள்ளது. அண்மையில் இவர்கள் பெளத்த பிக்கு ஒருவரை துரத்திச் சென்று ஐ பாட்டால் தாக்குதல் நடத்திய சம்பவமொன்றும் இடம் பெற்றுள்ளது.
தாங்கள் நினைத்தால் ஆட்சியையே மாற்றுவோம் என்று அண்மையில் இந்த அமைப்பு சூளுரைத்துள்ளது. பெளத்த மக்களின் ஆதரவின்றி ஜனாதிபதியால் மீண்டும் தேர்தலில் வெல்ல முடியுமா? என்றும் இவர்கள் ஜனாதிபதிக்கே சவால் விடும் நிலைக்குச் சென்றுள்ளனர். அதே போல் முஸ்லிம்களின் மீள் குடியேற்றத்துக்கு உதவியுள்ளதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷவுக்கு எதிராகவும் கருத்து வெளியிட்டுள்ளனர். எதிர்காலத்தில் இவர்கள் அரசாங்கத்துக்கு எதிராகவும் செயல்படுவார்கள்.
தாங்கள் எதனைச் செய்தாலும் யாரும் நடவடிக்கை எடுக்க முடியாது என்ற வகையில் தான் இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் அமைந்துள்ளன. பெளத்தர்கள் அனைவரும் உத்தியோகபூர்வமற்ற பொலிஸாராக மாற வேண்டும் என்று இந்த அமைப்பு தெரிவித்தது.
சிறுபான்மை இனத்தவரை அடக்க வேண்டும் என்று பொதுபலசேனா அமைப்பு இவ்வாறு தெரிவித்துள்ளது என்றும் அமைச்சர் ரிஷாத் பதியூதின் தெரிவித்தார்.
Geen opmerkingen:
Een reactie posten