தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 april 2014

பௌத்தம் வேண்டாம் எனக் கூறும் எதனையும் தமது அமைச்சு செய்ய போவதில்லை: பசில் ராஜபக்ஷ!


மத விவகாரங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவில் முதல் முறைப்பாட்டை செய்த சிங்கள ராவய
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 09:21.15 AM GMT ]
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உத்தரவின் பேரில் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ள மத சம்பவங்கள் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் பொலிஸ் பிரிவுக்கு, முதல் முறைப்பாடு கிடைத்துள்ளது.
இந்த முறைப்பாட்டை சிங்கள ராவய அமைப்பு செய்துள்ளது.

அந்த அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரத்ன தேரர் இன்று காலை 10.30 அளவில் தனது முறைப்பாட்டை செய்துள்ளார்.
பௌத்த மற்றும் மத விவகார அமைச்சின் 5 வது மாடியில் இந்த விசேட பொலிஸ் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாட்டில் இடம்பெறும் அனைத்து சம்பவங்கள் தொடர்பிலும் விசாரணை நடத்த பொது சட்டம் இருக்கும் நிலையில், மத சம்பவங்கள் தொடர்பில் விசாரணை நடத்த தனிப் பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டுள்ளதை சிலர் விமர்சித்துள்ளனர்.

அதேவேளை இந்த பொலிஸ் பிரிவு ஏற்படுத்தப்பட்டமை குறித்து பொதுபல சேனா பாராட்டியுள்ளது.

பௌத்தம் வேண்டாம் எனக் கூறும் எதனையும் தமது அமைச்சு செய்ய போவதில்லை: பசில் ராஜபக்ஷ
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 06:30.02 AM GMT ]
பௌத்த தர்மத்தில் செய்ய கூடாது என்று கூறியுள்ளதை, தமது அமைச்சு செய்யாது என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
பௌத்த தர்மத்திற்கோ, ஏனைய மதங்களுக்கோ முரணான ஒன்றை அரசாங்கம் எப்போதும் செய்யாது. அப்படியான நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொள்ளாது.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் வரை அப்படியான எந்த நடவடிக்கைக்கும் இடமளிக்க மாட்டார் எனவும் அமைச்சர் பசில் கூறியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten