இதையடுத்து இந்த 7 பேரையும் விடுவிக்க முடிவு செய்து தமிழக சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த முடிவை எதிர்த்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், கடந்த பெப்ரவரி 20ம் திகதியன்று முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரின் விடுதலைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. இந்த நிலையில் குறிப்பிட்ட இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றுமாறு, இன்று நீதிபதிகள் கூறியுள்ளார்கள். அதாவது காங்கிரஸ் அரசின் அழுத்தம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என அறியப்படுகிறது.
நடந்து முடிந்துள்ள தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி பாரிய வெற்றியடையும் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. ஆட்சியை இழந்து சோனியா வீட்டுக்குச் செல்ல நேரிடும் என்பது தற்போது யாவரும் அறிந்த உண்மையாகும். இன் நிலையில் கூட ஈழத் தமிழர்களுக்கு நன்மை எதனையும் செய்யக்கூடாது என்று அவர் கங்கணம் கட்டி அலைகிறார். வீட்டுக்குச் சென்றால் கூட பரவாயில்லை, ஆனால் தமிழர்களுக்கு ஒரு போதும் உதவக்கூடாது என்பதே அவரது நிலையாக உள்ளது. தமிழக மக்கள் இம்முறை காங்கிரஸ் கட்சிக்கு ஒரு நல்ல பாடத்தை புகட்டவுள்ளார்கள் என்பது , அடுத்த மாதம் தேர்தல் முடிவுகள் வரும்வேளை சோனியா நன்றாக அறிந்துகொள்ளவார்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6744
Geen opmerkingen:
Een reactie posten