தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 april 2014

எமது வரலாற்றை பதிவு செய்த நூல்களை இப்போது தேட வேண்டிய காலம் !



கிளிநொச்சி மத்திய கல்லூரி பழைய மாணவனும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவனுமான வன்னியூர் செந்தூரனின் “உயிர்வலித்த கணம்” கவிதை நூல் வெளியீட்டு விழா கிளி. மத்திய கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றுள்ளது.
பிரபல தமிழ் ஆசிரியர் லோகேசுவரனின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன கலந்து கொண்டு நூலை வெளியிட்டு வைத்தார்.
இந்த விழாவில் வரவேற்புரையினை முல்லைத்தீவு கற்சிலைமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபரும் இலக்கிய விமர்சகருமான சி.நாகேந்திரராஜா வழங்கினார்.
வெளியீட்டுரையை கிளிநொச்சி மத்திய கல்லூரி தேசிய பாடசாலை அதிபர் ரவீந்திரனும், நயப்புரைகளை கவிஞர் சமரபாகுசீனா உதயகுமாரும், முல்லைத்தீவு துணுக்காய் வலயத்தை சேர்ந்த திருமதி கௌரிபுத்திரியும் வழங்கினர்.
ஏற்புரையை நூலாசிரியர் செந்தூரன் வழங்கினார்.
இந்த விழாவிற்கு வடமாகாணசபை உறுப்பினர் ப.அரியரத்தினம், கிளிநொச்சி, திருவையாறு, பாரதிபுரம், மலையாளபுரம், உருத்திரபுரம் ஆகிய பிரதேச பாடசாலைகளின் அதிபர்களான பெ.கணேசன், சிறீதரன்,  திருமதி.சூரியகமாரி இராஜேந்திரம், திருமதி.இருதயசிவதாஸ் மற்றும் ஆசிரியர் அ.சத்தியானந்தம், பா.உறுப்பினர் சி.சிறீதரனின் செயலாளரும் கிளிநொச்சி கிழக்கு பிரதேச த.தே.கூட்டமைப்பின் அமைப்பாளரும் கவிஞருமான பொன்.காந்தன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.
இங்கு பிரதம விருந்தினராக கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரையாற்றும்போது,
இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடியென சொல்லப்படுகின்றது. அவை காலத்தை வாழ்விக்க வல்லன.
நாம் வாழ்ந்த கடந்த காலத்தின் உண்மையான எமது இனத்தை அடையாளப்படுத்தக்கூடிய பதிவுகளை இப்போது தேடவேண்டியதாக இருக்கின்றது.
இந்த மண்டபத்துள் வருகின்றபோது போர்க்காலத்தில் இங்கு வெளியிடப்பட்ட எல்லைகளை நோக்கி என்ற நூல் ஞாபகம் வருகின்றது. அந்த நூல் எமது நிலம் பற்றியதும் அது பறித்தெடுக்கப்பட்ட வரலாறு பற்றியதுமான புள்ளிவிபரங்களுடன் கூடிய ஒரு வரலாற்றுப் பதிவு.
எமது இனத்தின சந்ததியின் கையில் இருக்க வேண்டிய நூல் அது. நான் அந்த எல்லைகளை நோக்கி என்ற நூலை இப்போது தேடிக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது இங்கு இருப்பதாய் தெரியவில்லை.
உண்மையான காலப் பதிவுகளுக்கு எப்போதும் வரலாற்றில் இடமுண்டு. எந்த கற்பனைகளுமற்று எமது மக்களின் கடந்த வாழ்க்கையை பதிவு செய்த அந்த அற்புதமான நூல்களை பற்றி இப்போது யாரும் பேசுவது இல்லை.
மாறாக நேற்றொன்று இன்று ஒன்றென பேசுகிறவர்களால் அடிவருடி மற்றும் கொள்கையற்ற படைப்புக்களால் இன்றைய பொழுதுகள் நிரம்பி வழிகின்றன. ஆனால் இதற்குள்ளும் தம்பி வன்னியூர் செந்தூரனின் உயிர் வலிக்கும் கணங்கள் நூல் எமக்கு நம்பிக்கை தருகின்றது.
இன்றும் கொள்கை வழுவாத பல எழுத்தாளர்கள் எம்மண்ணில எழுதுகின்றார்கள். அவர்கள் மிகவும் மதிக்கபட வேண்டியவர்கள். அத்தகையதோர் பயணத்தின் ஆரம்பம் வன்னியூர் செந்தூரனுடையது.
அவர் இன்னும் காத்திரமான எல்லைகளை தொடவேண்டும். பருவகால பதிவுகளாய் எழுத்துக்கள் திகழாமல் காலத்தின் மிகத்தெளிந்த கண்ணாடியாக திகழட்டும் என குறிப்பிட்டார்.
மேற்படி விழாவில் பல இளைய கவிதை துறைசார்ந்தவர்கள் ஆர்வத்துடன் பங்குபற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfs1.html

Geen opmerkingen:

Een reactie posten