[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 11:56.11 AM GMT ]
நாடாளுமன்ற தாக்குதலில் ஈடுபட்ட அப்சல் குருவை தூக்கிலிட வலியுறுத்திய பாஜக தலைவர்கள் ராஜீவ் கொலையாளிகளை தூக்கிலிட ஏன் வலியுறுத்தவில்லை என்று மத்திய அமைச்சர் கபில்சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக மத்திய சட்டத்துறை அமைச்சர் கூறுகையில்,
நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டிருக்கிறோம். பாரதிய ஜனதா கட்சியின் எந்த தலைவரும் ராஜீவ் காந்தி கொலையாளிகளை தூக்கில் போடுவது குறித்து பேசியதாக எங்களுக்கு தெரியவில்லை.
நாடாளுமன்ற தாக்குதல் குற்றவாளி அப்சல் குருவை தூக்கில் போட வலியுறுத்தி ஒவ்வொரு நாளும் நாடாளுமன்றத்திலும் வெளியிலும் பேசினர்.
ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர்கள் ராஜீவ் கொலையாளிகளின் தூக்கு தண்டனையை நிறைவேற்றுவது தொடர்பாக 20 ஆண்டுகாலமாக அமைதியாக இருக்கிறார்கள்.
அவர்கள் தீவிரவாதத்துக்கு எதிராக போராடவில்லை. வாக்குகளை குறிவைத்தே பேசுகிறார்கள். கடந்த 15 ஆண்டுகாலமாக ராஜீவ் கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று மோடி ஏன் வலியுறுத்தவில்லை என கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfu1.html
ஜெயலலிதாவுக்கு புலம்பெயர் தமிழர்களிடம் பெரும் ஆதரவு
[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 12:27.45 PM GMT ]
ஜெயலலிதா இதுவரை கொண்டிருந்த தனது நிலைப்பாட்டை மாற்றி இலங்கை தமிழர்களின் சுயநிர்ணய உரிமைகளுக்காக குரல் கொடுத்துள்ளார்.
இலங்கை தமிழர்களும், புலம்பெயர் தமிழர்களும் அதிமுகவின் வெற்றிக்காக இணையத்தள பிரசாரங்களை மேற்கொண்டுள்ளனர்.
தேர்தலில் வெற்றி பெற்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலிதா இந்தியாவின் அடுத்த பிரதமராக தெரிவானால், தனித் தமிழ் ஈழத்திற்கான ஒரு வலுவான நபராக இருப்பார் எனவும் அவர்கள் எண்ணுகின்றனர்.
இதனால் புலம்பெயர் குழுக்கள் தேர்தலில் அதிமுக வெற்றி பெறும் என்று பந்தயம் கட்டி வருகின்றனர்.
அதேவேளை மதிமுக தலைவரும் புலிகளின் முக்கிய ஆதரவாளரும் புலம்பெயர் தமிழர்களின் அன்புக்கு பாத்திரமான வைகோவால் கூட அவர்கள் மத்தியில் இவ்வாறான ஆதரவை பெற முடியவில்லை.
மத்தியில் ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைந்தால், ஈழ தமிழர்களுக்கான தனது ஆதரவு நிலையில் வேகம் காட்டுவார் எனவும் அவர்கள் கருதுகின்றனர்.
இதனால் தமிழர்கள் பெருமளவில் அதிமுகவிற்கு ஆதரவு வழங்கி ஜெயலலிதாவின் கரங்களை பலப்படுத்த வேண்டும் என இலங்கை தமிழர்களின் அமெரிக்காவை தளமாக ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
ஈழப்பிரச்சினை, கொழும்பு மீதான பொருளாதார தடை, இனப்படுகொலைக்கு உறுதியான பொறுப்புக் கூறல் போன்ற தனது நிலைப்பாடுகளை முதல்வர் தொடர்வார் என அவர்கள் கருதுகின்றனர்.
இதனால் இது முக்கியமான தேர்தல், தமிழ் சகோதரர்களுக்கு கிடைத்துள்ள இந்த வாய்ப்பை தவறவிடாது உணர்வு பூர்வமாக முடிவு செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுள்ளனர்.
இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை இவ்வாறு செய்தி வெளியிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfu2.html
Geen opmerkingen:
Een reactie posten