தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 april 2014

நெடியவனை இலங்கை கொண்டுவர நோர்வேக்கு பயணமாகியுள்ள அதிகாரிகள் !


விடுதலைப் புலிகளின் வெளிநாட்டுத் தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் நெடியவன் என்று இலங்கை அரசு கூறிவருகிறது. எந்த ஒரு செயல்பாட்டிலும் அவர் இல்லை என்பது புலம்பெயர் மக்களுக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவரை இலங்கைக்கு நாடு கடத்தவேண்டும் என்ற கோரிக்கையை பலகாலமாக விடுத்துவருகிறது இலங்கை. ஆனால் சமீபகாலமாக இக்கோரிக்கையில் பெரும் தீவிரத்தை காட்டி வருகிறது இலங்கை அரசு. ஏற்கனவே நெடியவன் மீது சர்வதேச பிடியாணையை பிறப்பித்துள்ளது இலங்கை. இன் நிலையில், இன்ரர் போல் பொலிசார் பட்டியலில் சிகப்பு (ஆபத்து) பட்டியலில் நெடியவன் பெயரை இலங்கை அரசு இட்டுள்ளது.

இது ஒருபுறம் இருக்க, இலங்கை அதிகாரிகள் சிலர் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் வருகிறார்கள். ஏன் எனில் இன்ரர் போல் பொலிசார் பிடியாணை பிறப்பித்தாலும் நோர்வே போன்ற நாடுகள் அதற்கு கட்டுப்பட தேவையில்லை. நோர்வே பொலிசார் உதவி இல்லாமல் நெடியவை இன்ரர் போல் பொலிசார் கைதுசெய்ய முடியாது. இதனையடுத்தே, நோர்வே அதிகாரிகளோடு இலங்கைப் புலனாய்வாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் சில அதிகாரிகள் நோர்வேயின் தலைநகர் ஓசிலோ சென்றுள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது. 

தற்சமயம் நோர்வே சென்றுள்ள இலங்கை அதிகாரிகள் நெடியவனிடம் தாம் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

Geen opmerkingen:

Een reactie posten