யாழில் பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 181 பேர் கைது !
26 April, 2014 by admin
மேலும் பிடியானை பிறப்பிக்கப்பட்ட 15 பேர், விபத்துக்களுடன் தொடர்புடைய 2 பேர் , பொது இடங்களில் கலகம் ஏற்படுத்தியமை தொடர்பில் ஏழு பேரும், திருட்டு சம்பவம் தொடர்பில் 5 பேரும், கொலை தொடர்பில் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ். பொலிஸ் பிரிவில் இவ்வாறான குற்றச் செயற்பாடுகளில் மொத்தம் 98 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். இதேவேளை, காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 90 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பலர் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஏனையவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் விமலசேன மேலும் சுட்டிக்காட்டினார்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6745
நெடியவனை இலங்கை கொண்டுவர நோர்வேக்கு பயணமாகியுள்ள அதிகாரிகள் !
26 April, 2014 by admin
இது ஒருபுறம் இருக்க, இலங்கை அதிகாரிகள் சிலர் கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டும் வருகிறார்கள். ஏன் எனில் இன்ரர் போல் பொலிசார் பிடியாணை பிறப்பித்தாலும் நோர்வே போன்ற நாடுகள் அதற்கு கட்டுப்பட தேவையில்லை. நோர்வே பொலிசார் உதவி இல்லாமல் நெடியவை இன்ரர் போல் பொலிசார் கைதுசெய்ய முடியாது. இதனையடுத்தே, நோர்வே அதிகாரிகளோடு இலங்கைப் புலனாய்வாளர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். மேலும் சில அதிகாரிகள் நோர்வேயின் தலைநகர் ஓசிலோ சென்றுள்ளார்கள் என்றும் மேலும் அறியப்படுகிறது.
தற்சமயம் நோர்வே சென்றுள்ள இலங்கை அதிகாரிகள் நெடியவனிடம் தாம் விசாரணை நடத்தவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6746
Geen opmerkingen:
Een reactie posten