[ பி.பி.சி ]
அந்த பாடசாலயில் ஏழாம் வகுப்பில் படிக்கும் ஃபாத்திமா ரில்வான் எனும் மாணவி இந்த மனுவை தாக்கல் செய்துள்ளார்.
கடந்த 1980 ம் ஆண்டு கல்வி அமைச்சு விடுத்துள்ள உத்தியோகபூர்வ உத்தரவுக்கு அமைய முஸ்லிம் மக்களின் பாரம்பரிய பஞ்சாப் உடை ஒரு பாடசாலை உடையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது என மனுதாரர் சார்பில் ஆஜரான சட்டவாதி ஹிஜாஸ் ஹிஸ்புல்லா தெரிவித்தார்.
எனவே வெள்ளை நிற பஞ்சாப் உடை பள்ளிக்கூடத்தில் அணிவதற்கு எந்த விதமான தடைகளும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.
அதே போன்று சம்பந்தப்பட்ட உடையை பாடசாலை உடையாக ஏற்றுக்கொள்ளுமாறு அண்மை காலத்தில் உச்சநிதிமன்றம் கூட தீர்போன்றை வழங்கி இருக்கின்றது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
பஞ்சாப் உடையை தடை செய்வதற்கான காரணங்கள் எதுவும் பாடசாலை நிர்வாகத்தினால் அறிவிட்டிருக்கவில்லை என்று அவர் தெரிவித்தார்.
ஆனால் மாணவர்களிடையே இனவாதத்தை தூண்டும் நோக்கில் இந்த மனு முன்னெடுக்கப்படுவதாக பாடசாலை அபிவிருத்தி குழுவினைச் சேர்ந்த சித்ரானந்த கமகே குற்றம் சாட்டினார்.
இஸ்லாமிய இனவாத குழுக்கள் இதன் பின்னணியில் இருக்கிறது என்று அவர் சாடினார்.
சம்பந்தப்பட்ட மனு எதிவரும் மே 13 ம் திகதிக்கு ஒத்திவைத்து, அன்றைய தினம் விளக்கங்களை சமர்ப்பிக்குமாறு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyERdLXex5.html
Geen opmerkingen:
Een reactie posten