தமிழரை கொல்பவருக்கு இஸ்லாம் நாடுகள் உயர் விருது கொடுப்பதன் மர்மம் என்ன?ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு, பஹ்ரெய்ன் அரசாங்கம் அதி உயர் விருது வழங்கி கௌரவித்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த உள்ளிட்ட பிரதிநிதிகள் குழுவினர் பஹ்ரெய்னுக்கு விஜயம் செய்துள்ளனர்.
பஹ்ரெய்ன் அரசாங்கத்தினால் வழங்கப்படும் அதி உயர் விருதான காலீபா விருது ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ளது.
பஹ்ரெய்ன் மன்னர் அஹமத் பின் இசா அல் காலீபாவினால் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
இரு தரப்பு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு ஜனாதிபதி வழங்கிய பங்களிப்பினை பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது.
1940ம் ஆண்டு முதல் தடவையாக இந்த விருது வழங்கப்பட்டது. 1970ம் ஆண்டு முதல் சீரான முறையில் விருது வழங்கப்பட்டு வருகின்றது.
சவூதி மன்னர், மலேசிய பிரதமர், இரண்டாம் எலிசபத் மஹாராணி உள்ளிட்ட பல முக்கியஸ்தர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
மறைந்த மன்னர் சேக் இசாபின் சல்மான் அல் காலீபா, மனிதாபிமானத்திற்கு வழங்கிய உன்னத சேவையை போற்றும் நோக்கில் காலீபா விருது வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
பஹ்ரெயினில் ஜனாதிபதி 3 உடன்படிக்கைகளில் கைச்சாத்து
பஹ்ரெயினுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, அங்கு முக்கியமான மூன்று உடன்படிக்கைளில் இன்று கைச்சாத்திட்டுள்ளார்.
விளையாட்டு, கலாசரம் மற்றும் கலைத்துறை சார்ந்த மூன்று ஒப்பந்தங்கள் இவ்வாறு கைச்சாத்தாகியுள்ளன.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பஹ்ரெயின் மன்னர் ஹமாட் பின் இசா அல் காலிஃபாவை அவரது அரச மாளிகையில் வைத்து சந்தித்திருந்தார்.
அத்துடன் அந்த நாட்டின் பிரதமர் இளவரசர் காலிஃபா பின் சல்மான் பின் ஹமாட் அல் காலிஃபா உள்ளிட்ட பலரையும் சந்திப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த சந்திப்புகளின் போது இரண்டு நாடுகளின் உறவுகள் தொடர்பிலும், வர்த்தக தொடர்புகள் தொடர்பிலும் முக்கியமாக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை அங்கு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு பஹ்ரெயின் மன்னர் பஹ்ரெயினின் உயரிய விருதான காலிஃபா பதக்கத்தையும் வழங்கி வைத்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyERdLXev6.html
மத வேறுபாடு,நிற வேறுபாடற்று இந்துநாடு,இஸ்லாம்நாடு,கிறிஸ்தவ நாடு என்று புத்தமதத்து கொள்கைகளை கொன்று புதைக்கும் இலங்கையுடன் இணைந்து நிற்பதன் நோக்கம் தமிழர் அழிய வேண்டும் என்பதானால் காரணம் என்ன?உலகின் பழம் பெரும் வரலாறு கொண்ட ஒரே இனமான தமிழனை அழிப்பதால் இவர்கள் சாதிக்கப்போவது என்ன??தீமை என்றும் வெல்லாது என்பதை என்று இந்த இழிகுலத்தோர் உணர்வரோ!!
Geen opmerkingen:
Een reactie posten