தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 april 2014

கற்பழிப்பதில் முதலிடம் இந்தியருக்கா,சிங்களவருக்கா?!!


இராணுவச் சிப்பாய்களைக் கொண்டு கணவரைக் கொலை செய்த மனைவி
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 12:35.30 AM GMT ]
இராணுவச் சிப்பாய்களைக் கொண்டு கணவரைக் கொலை செய்த மனைவி ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 
குருணாகல் பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கணவரை படுகொலை செய்வதற்காக இருபது லட்ச ரூபா பணத்தை இராணுவச் சிப்பாய்களுக்கு வழங்கியுள்ளார்.
குருநாகல், வெல்லாவ பிரதேச நெலியா கிராமத்தில் கடந்த மார்ச் மாதம் 8ம் திகதி 37 வயதான ஜனக பிரியந்த என்ற செல்வந்த வர்த்தகர் கொடூரமான முறையில் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்டார்.
கொலையுண்டவர் மனைவியுடன் கோபித்துக்கொண்டு தனியே வாழ்ந்த வந்தார்.
வெளிநாடு சென்று திரும்பிய குறித்த நபரின் மனைவி ஏக்கர் கணக்கான தெங்கு காணியை விற்பனை செய்யுமாறு கோரியுள்ளார். எனினும், இதற்கு கணவர் இணங்கவில்லை.
இதனால் ஆத்திரமுற்ற மனைவி கொக்காவில் இராணுவ முகாமில் கடமையாற்றி வரும் இரண்டு படைச் சிப்பாய்களின் ஒத்துழைப்புடன் கணவரை கொலை செய்துள்ளார்.
உறவினரான படைச் சிப்பாய் ஊடாக குறித்த இரண்டு படைச் சிப்பாய்களின் அறிமுகம் கிட்டியுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பெண் மற்றும் இராணுவச் சிப்பாய்கள் அனைவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆசை காட்டி 14 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய கும்பல்
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 08:08.13 AM GMT ]
புத்தாண்டு கொண்டாட்டம் நிகழ்ச்சி ஒன்றைப் பார்க்க சென்றிருந்த 14 வயது சிறுமியை கூட்டாக பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவம் அக்மீமன, பட்டதுவ என்ற பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக அக்மீமன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பட்டதுவ பிரதேசத்தில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சியை பார்ப்பதற்காக குறித்த சிறுமி சென்றிருந்தார்.
அப்போது அங்கு சென்றிருந்த இளைஞர்கள் சிலர் அந்த சிறுமி நட்புடன் பழகியுள்ளார். சிறுமி அழகாக இருப்பதால், புத்தாண்டு இளவரசி போட்டியில் கலந்து கொள்ளுமாறு இளைஞர்கள் சிறுமியிடம் கூறியுள்ளனர்.
போட்டியில் கலந்து கொள்வதற்கு தேவையான உடைகளை வாங்கி தருவதாக கூறி, இளைஞர்கள் அந்த சிறுமியை முச்சக்கர வண்டி ஒன்றில் காலி நகருக்கு அழைத்துச் செல்வதாக தெரிவித்து, நகரில் உள்ள விடுதியொன்று அழைத்துச் சென்று கூட்டாக வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளனர்.
இதன் பின்னர், சிறுமியை நடு வழியில் விட்டுச் சென்றுள்ளனர். காலி மொரகொல்லவை சேர்ந்த சிறுமி சம்பவம் குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்ததை அடுத்து சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்த பொலிஸார், சம்பவம் தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

Geen opmerkingen:

Een reactie posten