தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 april 2014

இராணுவ பாலியல் கொடுமைகள்! நாட்டிற்கே அவமானம்: ஹசன் !

அரசாங்கம் பிடிவாதமாக இருந்தால் குற்றச்சாட்டு உண்மையாகிவிடும். மக்கள் தொடர்பில் அரசு கூடிய கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.  இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்தின் போது தமிழ் பெண்கள் பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக ஐ.நா. வெளியிட்ட அறிக்கை தொடர்பில் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யுத்த குற்றங்களை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை என்றால் உடனடியாக நிரூபித்துக் காட்ட வேண்டும். இராணுவத்தினரால் பாலியல் வன் கொடுமைகள் இடம் பெறுகின்றதென்பது நாட்டிற்கே அவமானம் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இறுதி யுத்தத்தில் பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐ.நா. அறிக்கை வெளியிட்டுள்ளது. இது மிகவும் மோசமானதொரு விடயமாகவே நாம் கருதுகின்றோம். இதனை அரசாங்கம் மறுக்கின்றது. அரசாங்கம் இவற்றை மறுப்பதானால் அதற்கான தகுந்த ஆதாரங்களுடன் நிரூபித்துக் காட்ட வேண்டும். ஒரு நாட்டில் இராணுவத்தினர் மீது இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் சர்வதேச அளவில் சுமத்தியிருப்பது சாதாரணமானதொரு விடயமல்ல.
வடக்கில் யுத்த குற்றங்கள் இடம்பெற்றதென்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு அதில் இருந்து அரசாங்கம் இன்னமும் விடுபட்டுக் கொள்ள முடியாத நிலையில் மீண்டும் மீண்டும் அவற்றினை வலுப்படுத்தும் வகையிலேயே குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்பட்டு வருகின்றது. இவற்றில் இருந்து அரசாங்கம் விடுபட வேண்டுமாயின் யுத்த குற்றங்கள் எவையும் இடம்பெறவில்லை என்பதை உடனடியாக நிரூபித்துக் காட்ட வேண்டும்.
http://www.jvpnews.com/srilanka/67263.html

Geen opmerkingen:

Een reactie posten