கிளிநொச்சி மாணவிகளுக்கு ஆடையைக் அவிழ்த்து பாலியல் தொல்லையில் இராணுவம்
கிளிநொச்சி முறிப்பு பகுதியில் உள்ள தெருவோரமாக முகாமிட்டுள்ள இராணுவத்தினர் அந்த வழியால் போய்வரும் பாடசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் குறித்த வழியால் பயணம் செய்யும் மாணவிகள் பெரும் இடர்பாடுகளுக்கு முகம் கொடுப்பதாக தெரிவிக்கின்றனர்.
இந்த வழியால் கோணாவில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளையும் அக்கராயன் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கிளிநொச்சி தனியார் கல்வி நிலையத்திற்கு செல்லும் மாணவிகளுக்கும் இராணுவத்தினர் தொல்லை கொடுக்கின்றனர். பாலியல் வார்த்தைகளை பிரயோகம் செய்வது, காதலிக்குமாறு கேட்பது என்று மாணவிகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவிக்கின்றனர்.
காவலரண்களில் உள்ள சில இராணுவத்தினர் பாடசாலை மாணவிகளைக் கண்டதும் தமது கீழாடைகளை கழற்றிவிட்டு நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனால் மாணவிகள் அந்த வழியால் போக்குவரத்தை மேறகொள்ள முடியாத நிலமை காணப்படுவதுதாகவும் தெரிவிக்கப்படுகிறது. கிளிநொச்சிப் பகுதிக்கும் அக்கராயன் கோணாவில் பகுதிக்குள் உள்ள ஒரே மார்க்கம் அதுவென்பதால் வேறு பாதைகளைப் பயன்படுத்தியும் மாணவர்கள் போக்குவரத்து செய்ய முடியாத நிலமை காணப்படுகிறது.
இதனால் பாடசாலை மற்றும் தனியார் கல்வி நிலையங்களுக்குச் செல்லும் மாணவிகள் இராணுவத்தினரின் பாலியல் தொல்லைகளை தாண்டியே பயணம் செய்ய வேண்டியுள்ளது.
http://www.jvpnews.com/srilanka/67517.html
வடக்கு பெண்கள் பலாத்காரத்தில் 17 இராணுவ சிப்பாய்களுக்கு நடவடிக்கை
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் இடம்பெற்ற (2007-2009) மற்றும் யுத்தம் நிறைவு பெற்ற (2009-2012) காலப்பகுதியில் வடக்கு பெண்கள் மீதான 11 பாலியல் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய 17 இராணுவச் சிப்பாய்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
இவற்றில் 6 சம்பவங்களுடன் இராணுவத்தினர் 10 பேருக்கு தொடர்புள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இன்று (30) கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய இராணுவப் பேச்சாளர் இந்த தகவல்களை தெரியப்படுத்தினார்.
2001ஆம் ஆண்டு தொடக்கம் 2013ஆம் ஆண்டு வரையில் வடக்கில் ஆயிரத்தில் ஒரு பெண் என்ற ரீதியில் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாக அவர் கூறினார். இந்த காலப்பகுதிக்குள் வடமத்திய மாகாணத்தில் ஆயிரத்துக்கு இருவர் என்ற ரீதியில் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாக இராணுவப் பேச்சாளர் குறிப்பிட்டார்.
இந்நிலையில் வடக்குப் பிரதேசங்களில் மட்டுமே பெண்கள் மீதாக பாலியல் பலாத்கார சம்பவங்கள் இடம் பெறவில்லை என அவர் தெரிவித்தார். எனினும் பலாத்கார சம்பவங்களுடன் தொடர்புடைய இராணுவத்தினருக்கு எதிரான நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் கூறினார்.
http://www.jvpnews.com/srilanka/67532.html
Geen opmerkingen:
Een reactie posten