தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 april 2014

அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்க முடியாது: மத விவகார அமைச்சு

தமிழக பொலிஸாரிடம் சிக்கினார் இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் உளவாளி
[ புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014, 04:05.01 AM GMT ]
இலங்கையைச் சேர்ந்த பாகிஸ்தான் புலனாய்வு முகவர் ஒருவரை தமிழகப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
கண்டியைச் சேர்ந்த, 37 வயதான, சகீர் ஹுசென் என்ற நபர், பாகிஸ்தானின் புலனாய்வு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் தொடர்புடையவர் என தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சுற்றுலா விசாவில் சென்னை வந்தபோது நேற்று கைது செய்யப்பட்டுள்ளார் என ரைம்ஸ் ஒவ் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இவரிடம் பெருமளவான போலி 1000 ரூபா நாணயத் தாள்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபரை, தமிழ்நாட்டில், தீவிரவாதச் செயற்பாடுகள் மற்றும், புலனாய்வு நடவடிக்கைகளுக்கு இளைஞர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் நியமித்துள்ளமை தெரியவந்துள்ளதாக தமிழக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர் கொழும்பிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளவர் என்று கிடைத்த தகவலின் பேரில் தமிழ்நாடு மாநில காவல்துறையின் புலனாய்வு பிரிவான கியூ பிரிவு காவல்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையிலிருந்துவரும் பயணிகளை உன்னிப்பாக கண்காணிக்கும் படி, தமிழ்நாடு காவல்துறைக்கு சில வாரங்களுக்கு முன்னர் மத்திய புலனாய்வுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையிலேயே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட ஹுசேன், தனது வாக்குமூலத்தில், பாகிஸ்தான் அதிகாரிக்காக செயற்பட்டதை ஒப்புக்கொண்டுள்ளார் என்றும், இவரிடம் இன்னும் அதிர்ச்சியான தகவல்களைத் தாம் பெற்றுள்ளதாகவும் தமிழ்நாடு பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இவரிடம் பெறப்பட்ட அதிர்ச்சியான வாக்குமூலம், மத்திய உள்துறை அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர், நேற்று மாலை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டு, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்
http://www.tamilwin.com/show-RUmsyEQULYnp6.html

அனுமதியின்றி வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்க முடியாது: மத விவகார அமைச்சு
[ புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014, 08:07.20 AM GMT ]
பௌத்த மற்றும் மத விவகாரங்கள் அமைச்சின் அனுமதியின்றி எதிர்காலத்தில் நாட்டில் எந்த வழிப்பாட்டுத் தலங்களும் ஆரம்பிக்க முடியாது என அமைச்சின் செயலாளர் எம்.கே.டி. திஸாநாயக்க தெரிவித்தார்.
புதிய மக்கள் குடியேற்றங்கள் ஏற்படும் இடங்களில் வணக்க ஸ்தலங்களும் ஏற்படுத்தப்படுவது வழமை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டிற்குள் 20 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் இருக்கின்றன. அவற்றில் 10 ஆயிரம் வழிபாட்டுத் தலங்கள் பௌத்த வழிப்பாட்டுத் தலங்கள்.
புதிய குடியேற்றங்கள் ஏற்படுத்தப்படும் போது வழிபாட்டுத் தலங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன.
சட்டத்திற்கு அப்பால் சென்று மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கைகளினால் பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
நாட்டு மக்கள் தாம் விரும்பியபடி தமது மதங்களை பின் பற்றும் உரிமை இருக்க வேண்டும் எனவும் திஸாநாயக்க மேலும் கூறியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyEQULYnrz.html

Geen opmerkingen:

Een reactie posten