கடந்த திங்கட்கிழமை இலங்கை சென்ற பிரிட்டிஷ் பெண்மணியை, இலங்கை அரசு நாடு கடத்தி இருந்தது. அவர் கைகளில் புத்தபிரானின் உருவம் பச்சை குத்தப்பட்டு இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது உண்மையா ? அங்கே உண்மையில் நடந்தது என்ன ? இதோ வெளிவராத தகவல்கள் சில ...
37 வயதாகும் நயோமி கோல்மென் என்னும் பிரித்தானியப் பெண், கடந்த திங்கட்கிழமை டெல்லியில் இருந்து கொழும்பு சென்றுள்ளார். அவர் இதற்கு முன்னரும் பல தடவை இலங்கை சென்று புத்த பிக்குகளுடன் இணைந்து தியானத்தில் ஈடுபடும் ஒரு நபர். புத்த மதத்தின்மேல் அவருக்கு மிகுந்த ஈடுபாடு உள்ளது. அத்தோடு அவர் பல புத்த தேசங்களுக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபடுபவர் ஆவார். அவர் கொழும்பு விமானநிலையத்தில் இறங்கிய பின், அங்கிருந்து வாடகைக்கு ஒரு காரை அமர்த்தி, நேரடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றுக்குச் சென்றுள்ளார். பொலிசார் தம்மிடம் லஞ்சம் கேட்டதாகவும், உயர் அதிகாரி ஒருவர் தன்னைப் பிடித்து துன்புறுத்தியதாகவும் குறைப்பாடு செய்துள்ளார். இதனால் அந்தப் பொலிஸ் நிலையத்தில் உள்ளவர்கள் ஆடிப்போனார்கள்.
முதலில் முறைப்பாடு எதனையும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர்கள் நயோமியிடம் கூறியுள்ளார்கள். இருப்பினும் அவர் அதனை ஏற்க மறுத்துவிட்டார். குறித்த பொலிஸ் நிலையத்தில் தனது முறைப்பாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை என்றால், தான் மேல் அதிகாரிகளை சந்திக்கவேண்டி வரும் என்று அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து அவரை எதுவித கேள்வியும் கேட்க்காமல் பொலிசார் உடனே கைதுசெய்து நீதிமன்றில் நிறுத்தியுள்ளார்கள். முறைப்பாடு செய்யச் சென்ற நயோமியின் கைகளில் , புத்தபெருமானின் உருவம் இருப்பதாக கூறியே அவரை நீதிமன்றம் அழைத்துச் சென்றுள்ளார்கள் பொலிசார். பொலிசார் தான் இப்படி அடாவடியில் ஈடுபடுகிறார்கள் என்று பார்த்தால், நீதிபதி அதற்கு மிஞ்சிய அடாவடிக்காரர் போல இருக்கிறது.
நீதிமன்றில் அப்பெண்னை ஒரு சொல் கூட பேச நீதிபதி அனுமதிக்கவில்லை. பொலிசார் சொன்ன தகவலை செவிமடுத்த அவர் ,குறித்த பிரிட்டிஷ் பெண்ணை உடனே டெல்லிக்கு நாடு கடத்த உத்தரவிட்டார். இதனை பெற்றுக்கொண்ட பொலிசார் அவரை அப்படியே கட்டநாயக்கா விமானநிலையம் கொண்டுசென்று டெல்லிக்கு நாடுகடத்தியுள்ளார்கள். குறித்த இப்பெண் கட்டநாயக்கா வந்து இறங்கியவேளை, ஒரு அதிகாரியால் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளார். அந்த அதிகாரி அரசு தலைவர் மகிந்தரின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ளவர் என்று கூறப்படுகிறது. இந்தப் பெண் இலங்கைக்குள் வந்து அவர் தொடர்பாக எதனையும் பேசக்கூடாது என்பதற்காகவும், குறித்த பெண்ணை மேலும் அச்சுறுத்தவுமே பொலிசார் முதலில் முனைந்துள்ளார்கள். அது பலிக்காமல் போகவே நாடு கடத்த முற்பட்டுள்ளார்கள்.
இது இவ்வாறு இருக்க, இலங்கையின் சட்ட வரைப்பில் எந்த இடத்தில் புத்தபிரானை எவரும் பச்சை குத்தக்கூடாது என்று எழுதி இருக்கிறது ? என்று காட்ட முடியுமா ? என்று மனித உரிமை அமைப்புகள் இலங்கைக்கு சவால் விடுத்துள்ளார்கள். இலங்கை அரச சட்ட திட்டங்கள் படி அப்படி எதுவும் இல்லை என்பதே உண்மையும் ஆகும். ஆனால் நீதிபதி தன்னிச்சையாக இவ்வாறு நடந்துகொண்டுள்ளார். சமீபத்தில் பிரித்தானிய அரசு இலங்கைக்கான பயண எச்சரிக்கையை தளர்த்தி, இலங்கை மிகவும் பாதுகாப்பான நாடு என்று கூறியிருந்தது. ஆனால் இந்த பச்சை குத்தும் விவகாரம் தொடர்பாக எதனையும் அவர்கள் கூறவில்லையே ?
http://athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6727
Geen opmerkingen:
Een reactie posten