தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zaterdag 26 april 2014

மூவரின் தூக்கு தண்டனை ரத்து! தீர்ப்பை எதிர்த்து அரசியல் சாசன அமர்வில் முறையீடு செய்கிறது மத்திய அரசு!

அரசியலுக்கு நீதிமன்றம் பணிந்தால், மக்களுக்கு நீதி  மீதான நம்பிக்கை போய்விடும்: பழ.நெடுமாறன்
[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 08:22.41 AM GMT ]
ராஜீவ் கொலை வழக்கை உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது. அரசியல் அழுத்தத்திற்கு உச்சநீதிமன்றம் பணியுமானால் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கை மக்களுக்கு போய்விடும் என உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன்  தெரிவித்தார்.
தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 7 பேர் குறித்த வழக்கை உச்சநீதிமன்றம் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி இருப்பது பெருத்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் மூத்த நீதிபதிகளுடன் அமர்ந்து இந்த வழக்கை விசாரித்தார்.
இந்த வழக்கில் மத்திய அரசின் சார்பில் போடப்பட்ட 2 மனுக்களில் ஒன்றில் தீர்ப்பு சொல்லி விட்டார்கள்.
அடுத்த மனு மீது தீர்ப்பு சொல்வதற்கு பதில் அதை அரசியல் சாசன அமர்வுக்கு அனுப்புவது என்று எடுத்த முடிவு அரசியல் அழுத்தத்தின் காரணமாக எடுக்கப்பட்ட முடிவாகவே கருதுகிறேன்.
இத்தகைய அரசியல் அழுத்தத்திற்கு உச்சநீதி மன்றம் பணியுமானால் நீதித்துறையின் மீதுள்ள நம்பிக்கை மக்களுக்கு போய்விடும்.
ஆகவே இந்த பிரச்சினையில் உச்சநீதிமன்றம் எடுத்த முடிவு சரியானது அல்ல.
உச்சநீதிமன்ற நீதிபதி ஓய்வு பெறுகிறார். இந்த வழக்கில் ஒரு மனுவின் மீது தீர்ப்பு அளித்த அன்றே 2–வது மனு மீதும் தீர்ப்பு சொல்லி இருக்கலாம்.
ஆனால் அதை வேண்டும் என்றே ஒத்தி வைக்கப்பட்டு, ஓய்வு பெறும் நாளில் இத்தகைய தீர்ப்பு சொல்லி இருப்பது தவறானது.
ஒவ்வொரு நீதிபதியின் மனநிலையை பொறுத்து தான் தீர்ப்பு என்றாகி விட்டது. இதனால் அடுத்து வரும் அமர்வில் எந்தெந்த நீதிபதிகள் பங்கேற்கிறார்கள். அவர்களில் மனநிலை என்ன? என்பதை பொறுத்து தான் இந்த வழக்கின் தீர்ப்பை பற்றி கருத்து சொல்ல முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfty.html
மூவரின் தூக்கு தண்டனை ரத்து! தீர்ப்பை எதிர்த்து அரசியல் சாசன அமர்வில் முறையீடு செய்கிறது மத்திய அரசு!
[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 08:48.47 AM GMT ]
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக சதாசிவம் பதவி வகித்த காலத்தில் தூக்கு தண்டனைகளை ரத்து செய்து ஆயுள் தண்டனையாக மாற்றி அளித்த தீர்ப்புகளை எதிர்த்து அரசியல் சாசன  அமர்வின் முன் முறையீடு செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் ரத்து செய்து ஆயுள் தண்டனையாக்கியது.
மூவரது கருணை மனுவை ஜனாதிபதி 11 ஆண்டுகாலம் கழித்து நிராகரித்ததால் இவர்களது தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக தீர்ப்பு வழங்கப்படடது.
இதைத் தொடர்ந்து ராஜிவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் இம்மூவர் மற்றும் நளினி உட்பட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இம்முறையீட்டு மனுவை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
தலைமை நீதிபதி சதாசிவம் பதவி காலத்தில் சந்தனக் கடத்தல் வீரப்பனின் கூட்டாளிகள் 4 பேர், டெல்லி குண்டு வெடிப்பு வழக்கில் தூக்கு விதிக்கப்பட்ட புல்லர் உள்ளிட்ட பலரது தூக்கு தண்டனையானது கருணை மனுக்களை ஜனாதிபதி தாமதமாக நிராகரித்தார் என்ற காரணத்தைக் காட்டியே ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
தற்போது இந்த தூக்கு தண்டனைகளை ரத்து செய்து அளித்த தீர்ப்புகளை எதிர்த்து அரசியல் சாசன அமர்வின் முன்பு மேல்முறையீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
அதாவது அரசியல் சாசனப்படி கருணை மனுக்களை ஜனாதிபதி நிராகரிக்க காலக்கெடு எதுவும் விதிக்க முடியாது என்பது மத்திய அரசின் வாதம்.
இதை அரசியல் சாசன  அமர்வு முன்பு எடுத்து வைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXft0.html

Geen opmerkingen:

Een reactie posten