[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 08:48.51 AM GMT ]
முல்லைத்தீவை வசிப்பிடமாக கொண்ட 35 வயதான இந்த சந்தேக நபர் இந்த மாத ஆரம்பத்தில் வவுனியாவில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் அந்தமான் தீவில் இருந்து திருப்பிய அனுப்பி வைக்கப்பட்டவர்கள் இவரால் அங்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது.
படகுகள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், காணாமல் போன மற்றும் பயணத்தின் போது கடலில் ஏற்பட்ட விபத்துக்களில் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் முறைப்பாடுகளை செய்துள்ளனரான என ஆராயப்பட்டு வருகிறது.
குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் தடுத்து வைக்கப்பட்ட சந்தேக நபரிடம் திணைக்களத்தின் சட்டவிரோத ஆட்கடத்தல் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகளின் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரும் வவுனியா பொலிஸாரும் விசாரணைகளை நடத்தி வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXft1.html
வடக்கு இராணுவத்தின் கோட்டை! முக்கால்வாசிப் பேர் வடக்கிலேயே உள்ளனர்!- த.தே.கூட்டமைப்பு
[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 10:19.57 AM GMT ]
ஜனாதிபதியின் விருப்பமும் இதுவென்பது தெளிவாக தெரிகின்றது வட மாகாணம் இன்று இராணுவத்தின் கோட்டையாக மாறிவிட்டது. ஏனைய மாகாணங்களைப் போல் வடக்கு இல்லை எனவும் அவர் குற்றம் சுமத்தினார்.
வடக்கில் இருந்து இராணுவம் விலக்கப்படமாட்டாது என்ற ஜனாதிபதியின் கருத்து தொடர்பில் கூட்டமைப்பிடம் வினவிய போதே அவர் மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
வடக்கில் வாழும் தமிழ் மக்கள் தமது உரிமைகளுக்காக தொடர்ந்தும் போராட வேண்டும் என்பதுதான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விருப்பமாக உள்ளது.
அதனால் தான் யுத்தம் முடிவடைந்து 5 ஆண்டுகள் கடந்தும் இன்றும் வடக்கில் இருந்து இராணுவத்தை அகற்றாது உள்ளனர்.
தமிழ் மக்களை அடக்கி வைப்பதற்காகவே அரசாங்கம் வித்தியாசமாக காரணங்களை சொல்லி வருகின்றனர்.
மீண்டும் விடுதலைப் புலிகள் உருவாகப் போவதோ தீவிரவாதம் பரவவோ எந்தவொரு சாத்தியமும் இல்லை.
வடக்கில் இருந்து 70 முகாம்கள் அளவில் அகற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால் அகற்றப்பட்ட சிறிய முகாம்கள் அனைத்தும் இன்று பெரிய முகாம்களாக மாற்றப்பட்டுள்ளது. இவற்றில் இருந்த இராணுவத்தையும் இன்னும் அகற்றவும் இல்லை.
இலங்கையில் உள்ள ஏனைய மாகாணங்களைப் போலல்ல வடமாகாணம். வடக்கு இன்று இராணுவத்தின் கோட்டையாக மாற்றப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள இராணுவத்தில் முக்கால்வாசிப் பேர் வடக்கிலேயே உள்ளனர். அவர்களின் ஆக்கிரமிப்பிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம்.
இராணுவத்தை வட மாகாணத்தில் வைத்து அரசாங்கம் என்ன செய்கின்றனர்? பொதுமக்கள் விடயத்தில் அநாவசியமான தலையீடுகளை இராணுவத்தினர் மேற்கொண்டு குழப்பங்களையும் சிக்கல்களையுமே ஏற்படுத்துகின்றனர்.
பல்லாயிரக்கணக்கான பொது மக்களின் காணிகளையும் இவ்வாறு இராணுவத்தினர் சூறையாடி விட்டனர்.
மேலும் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்களை அடக்கி வைப்பதாலோ அல்லது விமர்சிப்பதாலோ அவர்கள் மேம்படப் போவதில்லை.
அரசாங்கம் அவர்களுக்கான வசதிகளையும் வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.
வடக்கில் இராணுவத்தினரை சுற்றி வளைத்து வைத்துக் கொண்டு மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். வடக்கு விடுதலை பெற்றுள்ளது என குறிப்பிடுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.
வடக்கில் இருந்து இராணுவத்தினரை அரசாங்கம் உடனடியாக வெளியேற்ற வேண்டும். இராணுவத்தை வெளியேற்றும் வரையில் வட மாகாண தமிழ் மக்கள் தொடர்ந்தும் போராடிக் கொண்டிருப்பார்கள்.
தமிழ் மக்களின் விடுதலைக்காக நாம் தொடர்ந்தும் போராடுவோம் எனவும் அவர் தெரிவித்தார்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXft3.html
Geen opmerkingen:
Een reactie posten