1964 ஆம் ஆண்டின் 28 ஆம் இலக்க காணி எடுத்தல் சட்டத்தின் பிரகாரம் காணி அபிவிருத்தி அமைச்சர் ஆணையிட்ட பிரகாரம் பொதுத்தேவைக்கென வடக்கு பக்கம் இறம்பைக்குளம் ஆனந்த நடராசா வித்தியாலயத்தையும் ஏனைய மூன்று திசைகளிலும் தனியார்கணிகளை எல்லையாகவும் காட்டப்பட்டுள்ள இக் காணிகள் உள் நுழைவு வெளியகழ்வு நிலையத்தை நிறுவுவதற்கு சுவீகரிக்கப்படவுள்ளதாகவும் இக் காணிகளை எவரும் உரிமை கோருவதற்கு இனங்காணப்படவில்லை எனவும் தெரிவித்து வவுனியா மன்னார் மாவட்ட காணி சுவீகரிப்பு உத்தியோகத்தர் ந. திருஞானசம்பந்தரால் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓமந்தை சோதனை சாவடி அமைந்துள்ள தனியார்களின் காணிகளை எவரும் உரிமை கொள்ளவில்லை என தெரிவித்து சுவீகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால் காணி உரிமையாளர்கள் செய்வதறியாது உள்ளனர்.
வவுனியா ஓமந்தை இறம்பைக்குளம் கிராமத்தில் அமைந்துள்ள இச் சோதனை சாவடி அமைந்துள்ள காணிகளில் வசித்தவாகள் காணி அனுமதிப்பத்திரங்களை வைத்துள்ள நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையால் 1997 ஆம் ஆண்டு பங்குனி மாதம் அப்பகுதியில் இருந்து இடம்பெயர்ந்திருந்தனர்.
இந் நிலையில் இக் காணியின் உரிமையாளர்கள் என தம்மை அடையாளப்படுத்தும் வகையில் 14 பேர் 2013 ஆம் ஆண்டு 2 ஆம் மாதம் 22 ஆம் திகதி திகதியிட்டு அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளருக்கு தமது காணிகளை விடுவித்து மீள்குடியேற்றுமாறு கோரி கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் தமது காணிகள் என உறுதிப்படுத்தும் ஆணவங்களை உள்ளடக்கிய அனுப்பிய கடிதத்திற்கு எவ்வித பதிலும் வழங்கப்படாத நிலையில் சுமார் ஒரு வருடம் கழிந்த நிலையில் சுவீகரிக்கப்படவுள்ளதாக தெரிவத்துள்ளமை தம்மை மாய்த்துக்கொள்ளும் அளவிற்கு வேதனையளிப்பதாக தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காணி உரிமையாளர்கள். பல இடப்பெயர்வுகளை சந்தித்து எப்போது தமது சொந்த காணிகளுக்குள் வாழ்வோம் என ஏங்கியிரந்த நிலையில் இவ்வாறான செயற்பாடு வேதனையளிப்பதாகவும் தமது இயல்பான வாழ்வை அங்கலாய்க்க செய்துள்ளதாகவும் தெரிவித்ததுடன் இக் காணிகளை மீள பெறுவதற்கு அரசியல் தலைவர்கள் கட்சி பேதமின்றி முன் வந்து செயற்படுத்தி தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.
http://www.jvpnews.com/srilanka/66631.html
Geen opmerkingen:
Een reactie posten