[ புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014, 08:04.22 AM GMT ]
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்மந்தன் தலைமையில் திருகோணமலை நகர சபை மண்டபத்தில் இக்கூட்டம் ஆரம்பமானது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் வடக்கு மாகாணசபை முதலமைச்சர் உட்பட திருகோணமலை நகரசபை தலைவர் க.செல்வராஜா மற்றும் உப தலைவர் சிறிஸ்கந்தராஜா, திருகோணமலை மாவட்ட இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் க.துரைரெட்ணசிங்கம், கூட்டமைப்பின் முக்கியஸதர்கள், வடமாகாண சபை அமைச்சர்கள், வடமாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த முக்கிய சந்திப்பில் இலங்கையின் இனப்பிரச்சினை தீர்வு பேச்சிக்கான தென்னாபிரிக்காவின் மத்தியஸ்தம், கூட்டமைப்பின் உயர் மட்டக் குழுவின் தென்னாபிரிக்க விஜயம், ஜெனிவாவில் கடந்த மார்ச் மாதம் இலங்கை அரசிற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்புரிமை நாடுகளினால் நிறை வேற்றப்பட்ட திர்மானம் மற்றும் வடக்கு கிழக்கில் தமிழ் மக்களை இலக்கு வைத்து தொடரும் அரசின் பழி வாங்கும் நடவடிக்கைகள் உள்ளிட்ட சமகால நிலைமைகள் தொடர்பில் ஆராயப்பட்வுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyEQULYnry.html
வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் புலி உறுப்பினர்களை கைது செய்ய விசேட நடவடிக்கை!- கோத்தபாய
[ புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014, 02:11.01 AM GMT ]
ஐக்கிய நாடுகள் அமைப்பின் பிரகடனத்தின் அடிப்படையில் சிகப்பு எச்சரிக்கை பட்டியலில் இணைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களை, இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட்டுள்ளது.
அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ள குறித்த நாடுகளிடம் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
முக்கிய புலி உறுப்பினர்கள் மறைந்திருக்கும் பதினெட்டு நாடுகளுக்கு ஏற்கனவே புலனாய்வு பிரிவு உத்தியோகத்தர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
புலி உறுப்பினர்களின் செயற்பாடுகள் குறித்து தெளிவுபடுத்தி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
கைது செய்யப்படும் புலி உறுப்பினர்களை இலங்கையிடம் ஒப்படைக்குமாறு கோரப்பட உள்ளது.
பெரும் எண்ணிக்கையிலான புலி உறுப்பினர்கள் கனடாவில் அடைக்கலம் பெற்றுக் கொண்டுள்ளனர் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyEQULYnp1.html
Geen opmerkingen:
Een reactie posten