தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 april 2014

நயோமி விடயம் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்


சட்டவிரோத மதுபானம் உட்கொண்டு இருவர் சாவு!- இரண்டு பொலிஸ்காரர்கள் மருத்துவமனையில்..
[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2014, 03:53.41 AM GMT ]
கொழும்பின் புறநகர் மீரிகமவில் சட்டவிரோத மதுபானத்தை உட்கொண்டவர்களில் குறைந்த இருவர் உயிரிழந்தனர்
இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குறித்த மதுபானத்தை உட்கொண்டதாக கூறப்படும் மேலும் இரண்டு பொலிஸ்காரர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்து ச்செல்லப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டனர்.
நயோமி விடயம் சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்
[ ஞாயிற்றுக்கிழமை, 27 ஏப்ரல் 2014, 03:26.49 AM GMT ]
புத்தபெருமானின் உருவத்தை வலது கை புஜத்தில் பொறித்திருந்த காரணத்தினால் பிரித்தானிய சுற்றுலாப் பயணி கோல்மன் நயோமி நாடு கடத்தப்பட்டமை காரணமாக சுற்றுலாத்துறைக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.
இந்த பயணி கடந்த ஒரு வாரத்துக்கு முன்னர் இலங்கைக்கு சென்றபோது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து தடுக்கப்பட்டார்.
இதன்போது அவரின் புஜத்தில் பச்சை குத்தியிருந்த புத்தப்பெருமானின் உருவம் மற்றும் இந்துக்கடவுளின் உருவம் என்பன மதத்தை இழிவுப்படுத்துவதாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டினார்.
இதன்போது தாம் ஏற்கனவே இந்த பச்சைக்குத்தலுடன் இலங்கை வந்தமையை நயோமி சுட்டிக்காட்டினார். எனினும் இலங்கை அதிகாரிகள் அவரை விட்டுவைக்கவில்லை.
இந்தநிலையில் தாம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏனைய 60 சாதாரண கைதிகளுடன் தரையில் படுக்கவைக்கப்பட்டதாக நயோமி குற்றம் சுமத்தினார்.
தம்மை சிறைச்சாலைக்கு அழைத்துச்செல்லும் போது ஆண் சிறைக்காவலர் பாலியல் ரீதியான வார்த்தைகளை பயன்படுத்தி சித்திரவதை செய்தார்.
சிறைக்சாலையில் இருந்த போது பெண் அலுவலர் ஒருவர் 2000 ரூபா கப்பம் கோரினார் என்று நயோமி முறையிட்டுள்ளார்.
எனினும் தாம் நயோமியை விமானத்தின் வர்த்தக இருக்கையில் அமர்த்தி அவரின் நாட்டுக்கு அனுப்பியதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில் நயோமி சம்பவம் நிச்சயமாக சுற்றுலாத்துறைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆங்கில செய்தித்தாள் குறிப்பிட்டுள்ளது.

Geen opmerkingen:

Een reactie posten