தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 april 2014

புலம்பெயர் தமிழ் அமைப்புகள் தடை! அரசுக்கு எதிராக வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

பிரித்தானிய தமிழ் பேரவை உள்ளிட்ட 16 புலம்பெயர் அமைப்புகளை தடைசெய்வதற்கு அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக வட மாகாண சபை தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ளது.
நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வட மாகாண சபை கூட்டத்தின் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக வடமாகாண சபையின் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
இதுவிர, மேலும் 22 பிரேரணையும் நேற்றைய கூட்டத்தின் போது நிறைவேற்றப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அவற்றில், இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால், ஐக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவையில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்கும் பிரேரணையும் உள்ளடங்கியுள்ளது.
அதேவேளை,  சமகால அரசியல் நிலவரங்கள் தொடர்பில் ஆராயும் பொருட்டு நாளை புதன்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில் திருகோணமலையில் நடைபெறவுள்ள கூட்டத்தில், வடமாகாண சபையின் 30 உறுப்பினர்களும், கிழக்கு மாகாண சபையின் 11 உறுப்பினர்களும் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்தும் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERdLXew7.html

Geen opmerkingen:

Een reactie posten