தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 april 2014

இத்தாலியில் புத்தரின் பெயரில் இயங்கிவரும் மதுபானக்கடைக்கு இலங்கையர்கள் எதிர்ப்பு!

பிரித்தானிய தமிழர் பேரவையால் நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் பெருமளவானோர் பங்கேற்பு
[ புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014, 02:23.53 AM GMT ]
பிரித்தானிய தமிழர் பேரவையினால் நடாத்தப்பட்ட பயிற்சிப் பட்டறையில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர், யுவதிகள் இணைந்து செயலாற்ற முன்வந்துள்ளனர்.
கடந்த 27ம் திகதி இப்பயிற்சிப் பட்டறை இடம்பெற்றுள்ளது. 
பிரித்தானிய தமிழர் பேரவையானது, தாயக மக்களின் விடுதலைக்காக கடந்த 2006ம் ஆண்டில் இருந்து பிரித்தானியா மற்றும் சர்வதேச சட்டதிட்டங்களுக்கு அமைய பல தளங்களில் தொடர்ச்சியாக தங்களுடைய வேலைத்திட்டங்களை ஜனநாயக வழியில் நகர்த்தி வருகின்றது.
அண்மைக்காலமாக ஸ்ரீலங்கா அரசு தனது நாடுகடந்த பயங்கரவாத செயல்பட்டினால் இதனை முறியடிக்க முனைந்த வேளையில் உணர்வுள்ள தமிழ்மக்கள் பெரிய அளவில் கலந்து கொண்டமை ஸ்ரீலங்கா அரசின் செயல்பாட்டினை ஜனநாயக வழியில் முறியடிக்க இங்குள்ள தமிழ் மக்கள் முனைப்பாக இருப்பதைக் காட்டுகின்றது.
மக்கள் மத்தியில் செயல்படும் செயல்பாட்டாளர்கள் தற்போதைய சவால்களுக்கு முகம் கொடுத்து வினைத்திறனுடனும் சிறந்த ஒருங்கமைப்புடனும் செயல்படத் தயார்படுத்துவதே இப் பயிற்சிப்பட்டறையின் நோக்கமாகும்.
இது பரஸ்பர பங்குபற்றல் அடிப்படையில் அமைந்ததால் பங்குபற்றியவர்கள் மிகுந்த ஈடுபாட்டுடன் இப் பட்டறையில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
அடுத்து வரும் ஒரு வருட காலத்தில் பெரிய அளவில் பிரித்தானிய தமிழ் மக்களை அணி திரட்டுவதற்கான வழி வகைகளில் தம்மை தயார்படுத்திக் கொள்ள இது உதவியதாக செயல்பாட்டாளர்கள் பலர் அபிப்பிராயம் தெரிவித்தனர்.
பிரித்தானியா வாழ் தமிழ் உறவுகள் அனைவரும் இவ் இளைஞர் யுவதிகளின் முன் மாதிரியைப் பின்பற்றி செயலாற்ற முன்வரவேண்டும்.
பிரித்தானியாவாழ் தமிழ் மக்களை பிரித்தானிய தமிழர் பேரவையில் உறுப்பினராக்குவதற்கும் செயல்பட விரும்புபவர்களை அடையாளம் கண்டு இணைப்பதற்கும் இவர்கள் உங்கள் வீடு தேடி வருவார்கள்.
குறைந்தபட்சம் உறுப்பினராக இணையுமாறு பிரித்தானிய தமிழ் மக்களை அன்புடன் வேண்டுகின்றோம். தனித் தனியே பிரிந்து நிற்பவர்களை சிறிலங்கா அரசினால் அச்சுறுத்த முடியும் ஒன்றுபட்டு திரண்டெழும் மக்களை எவராலும் மிரட்ட முடியாது.
ஒன்றுபடுவோம் சிறிலங்காவின் தடைகளையும் அச்சுறுத்தல்களையும் தமிழ் மக்கள் நிராகரிக்கிறார்கள் என்பதனை உலகுக்கு வெளிக் கொண்டு வருவோம்.
எதிர்வரும் மே 18 முள்ளிவாய்க்கால் இனவழிப்பு நினைவு தினத்தில் கலந்து கொண்டு சிறிலங்கா அரசின் அச்சுறுத்தலையும் சதிகளையும் நாம் உடைத்தெறிவோம்.
சிறிலங்கா அரச பயங்கரவாதத்தை எமது ஜனநாயக வழியில் முறியடிப்போம் வாருங்கள் என பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyEQULYnp3.html
இத்தாலியில் புத்தரின் பெயரில் இயங்கிவரும் மதுபானக்கடைக்கு இலங்கையர்கள் எதிர்ப்பு!
[ புதன்கிழமை, 30 ஏப்ரல் 2014, 02:34.35 AM GMT ]
இத்தாலியில் இயங்கி வரும் மதுபான கடையொன்றுக்கு அந்நாட்டில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். கௌதம புத்தரை இழிவுபடுத்தும் வகையில் இந்த மதுபானக் கடைக்கு பெயரிடப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
குறித்த கடைக்கு புத்தா பார் என பெயரிடப்பட்டுள்ளது.
கடையின் பெயர்ப் பலகையில் புத்தா என எழுதப்பட்டுள்ளதுடன், புத்தரின் உருவவும் பொறிக்கப்பட்டு உள்ளதாக இத்தாலி வாழ் இலங்கையர்கள் விசன் வெளியிட்டுள்ளனர்.
அண்மையில் இந்த புதிய மதுபானக் கடை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த மதுபானக் கடைக்குச் செல்ல வேண்டாம் என இத்தாலி வாழ் இலங்கையர்கள் கோரியுள்ளனர்.
இத்தாலியின் பார்மாவின் சாலா பகான்ஸா என்னும் இடத்தில் இந்த மதுபானக் கடை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த மதுபானக் கடைக்கு எதிர்ப்பை வெளியிடுமாறு இத்தாலி வாழ் இலங்கையர்கள் அந்நாட்டுக்கான இலங்கைத் தூதரகத்திடம் கோரியுள்ளனர்.
http://www.tamilwin.com/show-RUmsyEQULYnp4.html



Geen opmerkingen:

Een reactie posten