சிகப்பு அறிவித்தல் வெளியானதும் நெடியவன் நோர்வேயில் தங்கியிருந்த இடத்தில் இருந்து தலைமறைவாகியுள்ளார் என்றும் நோர்வே பாதுகாப்பு தரப்புடன் இலங்கை பாதுகாப்புத் துறையினர் தொடர்பு கொண்டு கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் நெடியவனை கைது செய்வது தொடர்பாக இலங்கை பாதுகாப்புத் தரப்புடன் ஒத்துழைத்துச் செயற்படுவதாக நோர்வே அரசாங்கம் இதுவரை அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை.
அதேவேளை சிவப்பு அறிவித்தல் எதுவும் சர்வதேச பொலிஸாரினால் வெளியிடப்படவில்லை என நோர்வேயின் முன்னாள் தூதுவர் எரிக்சொல்ஹெய்ம் சர்வதேச ஊடகங்களுக்கு கருத்துக் கூறி ஒரு வாரத்தில் சிவப்பு அறிவித்தல் வெளியானமை குறிப்பிடத்தக்கது. இருப்பினும் நெடியவன் இதுவரை தலைமறைவாக வில்லை என்றும் அவர் சாதாரணமாக வாழ்ந்து வருவதாகவும் நோர்வேயில் இருந்து கிடைக்கும் செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன. மேலும் நெடியவன் 2009ம் ஆண்டுக்குப் பின்னர், இதுவரையும் எதுவித செயல்பாடுகளிலும் ஈடுபடவில்லை என்றும், நெருக்கமான சிலர் அதிர்வுக்கு தெரிவித்துள்ளார்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6753
Geen opmerkingen:
Een reactie posten