கடந்த வாரத்தில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து பொலிஸாரால் தாக்கப்பட்ட பயணி ஒருவர் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யவுள்ளார்
துமிந்த ஹப்புஆராய்ச்சி என்ற இந்த பயணி, புகையிரத நிலையத்தில் நின்று கொண்டிருக்கையில் பொலிஸாருக்கும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதன்போது பொலிஸார் குறித்த பயணியை தாக்கினர். இதனால் அவருக்கு தலையில் காயம் ஏற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தநிலையில் தாம் தாக்கப்பட்டமைக்கு எதிராக அவர் அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யப்போவதாக அறிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பில் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் விசாரணைகள் நடத்தப்படுவதாகவும், எந்த பொலிஸ் உத்தியோகத்தர் குற்றவாளி என கண்டு பிடிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Geen opmerkingen:
Een reactie posten