[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 09:42.04 AM GMT ]
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம், கி.துரைராஜசிங்கம், இரா.துரைரெட்னம், ஞா.கிருஸ்ணபிள்ளை, பிரசன்னா இந்திரகுமார் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டுள்ளனர்.
நாடாளுமன்றில் இடம்பெற்ற கசினோ தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமையும் எதிர்ப்பது என்றே அர்த்தப்படும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
உழைக்கும் உறவுகளோடு ஒன்றிணைந்து உரிமைக்காய் குரல் கொடுப்போம் என்ற தொனிப்பொருளில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மே தினத்தை நடத்துகின்றது.
இதனையொட்டி மட்டக்களப்பு நகரின் அனைத்து வர்த்தக நிலையங்கள் மற்றும் பொதுச்சந்தை என்பனவற்றுக்கு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.
எதிர்வரும் முதலாம் திகதி மட்டக்களப்பு சார்ள்ஸ் மண்டபத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தலைமையில் நடைபெறவுள்ள இந்த மேதின நிகழ்வில் மகிட உரையினை தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நிகழ்த்தவுள்ளார்.
சிறப்புரையை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் நிகழ்த்தவுள்ளதுடன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான இரா.துரைரெட்னம், கோ.கருணாகரம், கி.துரைராஜசிங்கம், ஞா.கிருஸ்ணபிள்ளை, நி.இந்திரகுமார், மா.நடராசா ஆகியோர் நிகழ்த்துவர்.
“வாழு…வாழவிடு” என்ற கோட்பாட்டைக் கொண்ட இந்த மேதின நாளில் அடக்கப்பட்ட மக்கள் அந்த அடக்குமுறையை அவிழ்த்தெறிந்து எல்லோர்க்கும் ‘எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்றதிந்த வையம்’ என்று பிரகடனப்படுத்திட அனைவரையும் அணி திரண்டு வருமாறு துண்டுப்பிரசுரத்தில் கோரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதது ஏன்?- முஸ்லி்ம் காங்கிரஸ் விளக்கம்!
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 10:00.40 AM GMT ]
நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட கசினோ என்ற பதம் உள்ளடக்கப்பட்டிருந்தால் எதிர்த்து வாக்களித்திருப்போம்.
முன்னாள் ஜனாதிபதிகள் ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர்.பிரேமதாச மற்றும் ரணில் விக்ரமசிங்க அமைச்சராக இருந்த போது 1988 ம் ஆண்டே ஜக்போட் கசினோ சூதாட்டம் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் கொண்டு வரப்பட்டு நிறைவேறியுள்ள இக்கட்டளை தொடர்பில் எமக்கு சந்தேகம் உள்ளது.
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட இவ் கட்டளைக்கு நாம் வாக்களிக்காது இருந்தமை இதனை ஆதரிப்பதற்காகவோ அரசாங்கத்தை வலுப்படுத்தவோ அல்ல.
முன்னர் இக்கட்டளை கொண்டு வந்த போது கசினோ என்ற பதத்தினை வலுப்படுத்தியிருந்தனர்.
எனினும் இம்முறை கசினோ என்ற பதம் அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக வேறு மாற்று வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே நாம் வாக்களிக்காது இருந்தோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாதிருந்தமையும் எதிர்ப்பு என்றே அர்த்தப்படும். இதில் எம்மை விமர்சிக்கும் அளவில் பெரிய விடயமெதுவும் இல்லை.
அதே போல் கசினோ என்ற பதம் குறிப்பிடப்பட்டிருக்குமாயின் நாம் நிச்சயமாக இதனை எதிர்த்தே வாக்களித்திருப்போம்.
கசினோ உள்ளடக்கிய சட்ட மூலம் கொண்டு வரப்படுமாயின் அதனை ஆதரிக்கப் போவதில்லை என்ற கருத்தினை ஆரம்பம் முதலே ஊடகங்களில் தெரிவித்து வந்தோம்.
இப்போதும் அதே முடிவிலேயே இருக்கின்றோம். சமூகத்தினை சீரழிக்கும் நோக்கம் எப்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு இருந்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கசினோவை கொண்டு வந்து சிங்கப்பூர், தாய்லாந்து போல் முன்னேற வேண்டும்!- உயர்கல்வி அமைச்சர்
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 11:00.25 AM GMT ]
அன்றைய ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கம் கொண்டு வந்த சூதாட்ட சட்டமூலமே இதற்கு காரணமாக அமைந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.
கண்டியில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐக்கிய தேசியக் கட்சி கொண்டு வந்த சூதாட்டச் சட்டம் காரணமாக இலங்கையில் 50 முதல் 60 வரையான கசினோ நிலையங்கள் உள்ளன.
நாட்டின் கசினோ நிலையங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த 50 மில்லியன் ரூபா வரி விதிப்பை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 100 மில்லியன் ரூபாவாக அதிகரித்ததால், நாட்டில் கசினோ நிலையங்கள் வரையறுக்கப்பட்டன.
வரையறுக்கப்பட்ட கசினோ நிலையங்கள் இன்றும் கொழும்பில் இயங்கி வருகின்றன. 1988ம் ஆண்டு ஜே.ஆர். ஜெயவர்தன கொண்டு வந்த சட்டம் காரணமாவே அவை இன்றும் இயங்கி வருகின்றன.
ஜே. ஆர் கொண்டு வந்த சூதாட்டச் சட்டமூலம் இன்னும் நாட்டில் அமுலில் இருக்கின்றது. இதனால் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிதாக கசினோ நிலையங்கள் எதனையும் அமைக்க இடமளிக்க போவதில்லை.
சாதாரண மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களிடம் இருந்து இவை தூர விலக்கி வைக்கப்படும்.
பௌத்த பிக்குகள், அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததனால், புதிதாக நிர்மாணிக்கப்பட உள்ள ஹொட்டல்களில் கசினோ வசதிகள் இல்லை.
இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். அவர்கள் ஹொட்டல்களில் தங்குகின்றனர். அவர்களுக்கு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும்.
மலேசியா முஸ்லிம் நாடு, அங்கு ஷரியா சட்டம் அமுலில் உள்ளது. எனினும் அந்த நாட்டில் தனியான தீவொன்றில் கசினோ விளையாடும் வசதிகளுடன் கூடிய ஹொட்டல்கள் உள்ளன.
அதேபோல் அரபு முஸ்லிம் நாடான டுபாய் நாட்டிலும் சகலமும் இருக்கின்றன. மாலைதீவுகளில் போதைப் பொருள் தடைச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுகிறது.
அங்கு 187 சுற்றுலா ஹொட்டல்கள் உள்ளன. அந்த ஹொட்டல்களில் மதுபானம், போதைப் பொருள், கசினோ என சகலமும் உள்ளன.
எமது நாட்டுக்கு வரும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வரிச் சலுகை வழங்க வேண்டும். நாம் சிங்கப்பூர் மற்றும் தாய்லாந்து மட்டத்திற்கு முன்னேற வேண்டும் எனவும் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.
Geen opmerkingen:
Een reactie posten