தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 30 april 2014

இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு 107 சிங்களம் 33 தமிழ்!!


இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக இரண்டு தடவைகள் கொழும்பில் நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையிலிருந்து 140 பேர் நேர்முகப்பரீட்சைக்காக தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

இப் பெறுபேறுகள் நேற்று கல்வியமைச்சின் இணையத்தளத்தில் வெளியாகியது.
இவர்களில் 107 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மீதி 33 பேரில் 13 முஸ்லிம்களும் 20 தமிழர்களும் அடங்குவர். இந்த 33 பேரில் 11பேர்; வடக்கையும் 16பேர் கிழக்கையும் மீதி 06 பேர் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்களாவர்.
இலங்கையில் இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 இல் 250க்கு மேல் வெற்றிடங்கள் இருந்தபோதிலும் திறந்த போட்டிப்பரீட்சையில் திறமைகாட்டிய 140 பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என கல்வியமைச்சின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.
இவர்களுக்கான திறந்த போட்டிப்பரீட்சைகள் 2012 மற்றும் 2013 இல் இரண்டு தடவைகளில் நடாத்தப்பட்டது.முதற்பரீட்சையில் சித்திபெற்றவர்களே இரண்டாம் பரீட்சைக்குத் தோற்ற அனுமதிக்கப்படுவர்.
தெரிவான சிறுபான்மையினத்தவர் விபரம்
தெரிவான சிறுபான்மை 33 பேரில் 13 முஸ்லிம்களும் 20 தமிழர்களும் அடங்குவர். இந்த 33 பேரில்; 16பேர் கிழக்கையும் 11பேர்; வடக்கையும் மீதி 06 பேர் ஏனைய மாகாணங்களைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
 கிழக்கு மாகாணம் 
திருமதி தனுசியா ராஜசேகர் (காரைதீவு) செல்வி.நேசராஜா வரணியா (காரைதீவு) சோதீஸ்வரன் சுரநுதன்(காரைதீவு) திருமதி என்.எச்.றியாசா(மருதமுனை) .எ.எம்.ஹன்சீன் ( சாய்ந்தமருது) எம்.பி. மைதிலி(திருகோணமலை) திருமதி பி.ஜிகானா (மருதமுனை) திருமதி எம்.ஜே.பாத்திமா றிவ்கா(ஏறாவூர்) ரி.ஜெயந்தன் ( திருகோணமலை) திருமதி. வி.நிதர்சினி;(பாண்டிருப்பு-கல்முனை) திருமதி எ.றிஸ்மியாபானு (ஓட்டமாவடி) எ.ஜி.பஸ்மில் (பாலமுனை) ஆர்.சுதர்சன்(களுவாஞ்சிக்குடி) எஸ.எம்.ஹைதர்அலி(மத்தியமுகாம்)எ.எம்.றிசாத்(அக்கரைப்பற்று) திருமதி.கே.ஜெயந்திமாலா (குறுமண்வெளி;)
வட மாகாணம்
திருமதி ஆர்.ஹம்சத்வனி ( யாழ்ப்பாணம்) திருமதி .எம்.நீரஜா ( நல்லூர்) செல்வி. ரி.தர்மிகா(யாழ்ப்பாணம்) ஜே.ஜெனிற்றன்(வவுனியா) செல்வி கே.ராதிகா (கரவெட்டி) திருமதி எஸ்.ஜனனி(அல்வாய்)ஆர்;.செந்தில்மாறன்(யாழ்ப்பாணம்)திருமதி.ஏ.எவோன்(மன்னார்)எம்.தெய்வேந்திரா (பருத்தித்துறை) ரி.பால்ராஜ்(பருத்தித்துறை)எம்.ஜெகதீஸன்(யாழ்ப்பாணம்)
ஏனைய மாகாணத்தவர்கள்-
எம்.ரி.எம்.அன்சாவ்(கன்னாதொட்ட) எம்.என்.சவ்றா(அக்குறண) எம்.எம்.எவ்.முஸ்னியா(மாவனல்ல) எ.சுமதி(கொட்டகல)எவ்.எஸ்.ஆமித்(அத்துறுகிரிய) எ.அஸ்கா(பேராதனை)
தெரிவானவர்களுக்கான நேர்முகப்பரீட்சை கல்வியமைச்சில் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு சேவை முன்பயிற்சி வழங்கப்பட்டு உரிய இடங்கள் காலக்கிரமத்தில் வழங்கப்படும்.
காரைதீவிலிருந்து மூவர் தெரிவு
வரலாற்றில் முதற்றடவையாக முத்தமிழ்வித்தகன் விபுலானந்த அடிகள் பிறந்த மண்ணிலிருந்து மூவர் தெரிவாகியுள்ளனர். மூவரும் விஞ்ஞான பட்டதாரிகளாவர்.
திருமதி தனுசியா ராஜசேகர் (காரைதீவு) செல்வி.நேசராஜா வரணியா (காரைதீவு) சோதீஸ்வரன் சுரநுதன்(காரைதீவு) ஆகியோரே தெரிவானவர்களாவர். அகில இலங்கை ரீதியில் இவர்கள் முறையே 2ஆம் 4ஆம் 8ஆம் நிலையிலுள்ளனர்.
மூவரும் பட்டதாரி ஆசிரியர்களாக சேவையாற்றுபவர்களாவர். இ.க.நி.சேவைக்கு காரைதீவிலிருந்து பெண்மணிகள் தெரிவானதும் இதுவே முதற்றடவையாகும் என்பது ஈண்டுகுறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 க்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக கடந்தாண்டு நவம்பரில் கொழும்பில் நடாத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சையிலிருந்து 159 பேர் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர் என்பதும் இவர்களில் 151 பேர் சிங்கள இனத்தைச் சேர்ந்தவர்களாவர். மீதி 08 பேரில் 05 முஸ்லிம்களும் 03 தமிழர்களும் அடங்குவர். இந்த எட்டுப் பேரில் இருவர் வடக்கையும் அறுவர் மத்தியையும் சேர்ந்தவர்களாவர் என்பதும் தெரிந்ததே.
இலங்கையில் இலங்கை கல்வி நிருவாக சேவை தரம் 3 இல் 250க்கு மேல் வெற்றிடங்கள் இருந்தபோதிலும் போட்டிப்பரீட்சையில் குறிப்பாக நுண்ணறிவு பாடத்தில் 40 புள்ளிகளுக்கு மேல் பெற்றவர்கள் 159 பேர் மாத்திரமே தெரிவுசெய்யப்பட்டிருந்தனர்.
இதில் கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழ் முஸ்லிம் யாருமே தெரிவுசெய்யப் படவில்லையென்பது குறிப்பிடத்;தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten