மன்னார் ஆயரைக் கைது செய்யக் கதை எழுதிய பொது பல சேனா!
http://www.jvpnews.com/srilanka/66728.html
யாழ். சிறையில் கைதியை அடித்துக் கொன்ற சிறைக்காவலர்கள்!
யாழ். சிறைச்சாலையில் சிறைக்காவலரால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதி ஒருவர் நேற்றிரவு 9.30 மணியளவில் உயிரிழந்தார். குறித்த நபரின் மூளை நரப்புப் பகுதியில் கடுமையாக தாக்கப்பட்டமையாலேயே உயிரிழக்க நேர்ந்ததாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சிறைக்காவலரை இடைநிறுத்தம் செய்திருப்பதாக சிறைச்சாலை வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 19ஆம் திகதி இரண்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்திருந்தனர். இதனையடுத்து அவர் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு உயிரிழந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு இன்று யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்றில் பெ.சிவகுமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதன்போது சாவடைந்தவருடைய மனைவி மற்றும் மைத்துனர் மன்றில் சாட்சியமளித்தனர். இறந்தவரின் மைத்துனர் தொடர்ந்தும் சாட்சியமளிக்கையில்,
வாகன விற்பனை தொடர்பில் எனது மைத்துனர் யாழ்ப்பாணத்தில் வைத்து கடந்த 2வருடங்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தண்டனை பெற்று வந்திருந்தார். எனினும் கடந்தவாரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அதனையடுத்து வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டோம். எனினும் நேற்று எனது மைத்துனர் என்னுடன் பேசினார். அப்போது சிறைச்சாலை உத்தியோகத்தர் ஒருவர் என்னைப் பிடிக்க மற்றவர் தாக்கினார் என்று கூறினார். எனவே சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் அடிச்சுத்தான் எனது மைத்துனரை கொண்டிருக்கினம் என அவர் மேலும் தெரிவித்தார்.
http://www.jvpnews.com/srilanka/66657.html
Geen opmerkingen:
Een reactie posten