தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 april 2014

கோபியின் கைத்தொலைபேசி சோதனை: யாழில் உறவினர் கைது



விகாரை என்பது காவி உடையில் இருக்கும் வியாபாரிகளின் இடம்: முன்னிலை கட்சி
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 07:15.21 AM GMT ]
பௌத்த விகாரைகள் என்பது காவி உடை அணிந்த வியாபாரிகள் இருக்கும் இடம் என முன்னிலை கட்சி உறுப்பினர் தீப்தி குமார குணரட்ன தெரிவித்தார்.
கொழும்பு பொது நூலகத்தில் நேற்று நடைபெற்ற மே தின பச்சோந்திகளும் சிகப்பு நிறமும் என்ற தலைப்பிலான கருத்தரங்கில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சந்த ருவான் சேனாதீர போன்ற ஊடகவியலாளர்கள் ஞானசார தேரரை கோத்தபாய ராஜபக்ஷ அல்லது மகிந்த ராஜபக்சவின் பிரச்சினை என காண்கின்றனர். ஆனால் ஞானசார என்பவர் தொடர்பான பிரச்சினை பொருளாதார முறை சம்பந்தப்பட்டது.
ஞானசார தேரர்  போன்றே ஏனையவர்களும் முதலாளித்துவத்தின் பிரச்சினை.
நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் போன்றவர்களின் பணத்தை அனுபவிப்பது அவர்களின் ஊழியர்கள். இதனால் இலங்கை தொழிலாளர்கள் யார், முதலாளிகள் யார் என்பது சரியான கண்டுப்பிடிக்க முடியவில்லை.
வலதுசாரிகள் யார், இடதுசாரிகள் யார் என இலங்கையில் உள்ளவர்களுக்கு புரியவில்லை. அந்த காலத்தில் இடதுசாரிகளையும் வலதுசாரிகளையும் பிரித்தறிய முடியும். ஆனால் தற்போது இடதுசாரிகள் யார், வலதுசாரிகள் யார் என்பதை பிரித்தறிய முடியாதுள்ளது எனவும் தீப்தி குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXgx7.html
கோபியின் கைத்தொலைபேசி சோதனை: யாழில் உறவினர் கைது
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 08:37.16 AM GMT ]
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த நபரொருவரை பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.
கடந்த 11 ஆம் திகதி வவுனியா, நெடுங்கேணியில் வைத்து சுட்டுக்கொலை செய்யப்பட்ட கஜீபன் என்றழைக்கப்படும் கோபியின் உறவினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அருளானந்தன் டினேஷ்குமார் என்ற குறித்த நபர், விடுதலைப் புலிகளின் புதிய தலைவர் என்று இராணுவத்தினரால் கூறப்பட்ட கோபி மற்றும் தேவியன், அப்பன் ஆகியோருக்கு உதவியதாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோபியின் தொலைபேசி அழைப்பினை சோதனை செய்த போது குறித்த நபர் அழைப்பினை ஏற்படுத்தியிருந்ததாக பயங்கரவாத குற்றத்தடுப்பு பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைதுசெய்யப்பட்ட அவரை கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXfo0.html

Geen opmerkingen:

Een reactie posten