[ வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014, 12:27.30 AM GMT ] [ பி.பி.சி ]
அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் அவர்களின் அலுவலகத்துக்குள் நேற்று புதன்கிழமை காலை பொதுபல சேனா அமைப்பினர் நுழைந்து மாற்றுக் கருத்துடைய ஒரு புத்தபிக்குவை தேடியதால் பெரும் பிரச்சினை ஏற்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் இதில் தலையிடும் நிலைமை உருவானது.
பொதுபல சேனாவின் உறுப்பினர்கள் புதனன்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்குள் அத்துமீறு நுழைந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
தமக்கு எதிராக செயல்படும் அமைப்பான ஜாதிகபல சேனாவைச் சேர்ந்த புத்தபிக்கு வட்டரக்க விஜித தேரர் அந்த அமைச்சக அலுவலகத்தில் ஒளிந்திருப்பதாகக் கூறியபடி பொதுபல சேனா அமைப்பினர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்குள் புகுந்தனர் என்று அமைச்சக அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
வட்டரக்க விஜித தேரர் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும் அமைச்சர் என்கிற முறையில் தன்னை சந்திக்க முடியும், அதை பொதுபல சேனா உட்பட யாரும் தடுக்கவும் முடியாது அதை கேட்பதற்கு உரிமையும் கிடையாது என ரிஷாத் பதியுதீன் தமிழோசையிடம் கூறினார்.
இந்தச் சம்பவம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் வேதனைப்பட்டதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஆனால் பொதுபல சேனா அமைப்பினரோ ஜாதிகபல சேனாவைச் சேர்ந்த வட்டரக்க விஜித தேரர் இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார் எனக் குற்றஞ்சாட்டுகின்றனர்.
ஜாதிகபல சேனாவின் பிக்கு தமது மதத்துக்கும் தேசத்துக்கும் கேடு விளைவிக்கிறார் என பொதுபல சேனா கூறுகிறது. அவர் அவ்வாறு செய்யக் கூடாது என நேரில் சந்தித்து அறிவுறுத்துவதே தமது நோக்கம் எனவும் பொதுபல சேனாவினர் கூறுகிறார்கள்.
இதனிடையே பொதுபல சேனா அமைப்பின் பிரதிநிதிகள், ராவண பாலய அமைப்பினர் மற்றும் தேசிய பிக்குமார் சம்மேளனம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நாட்டின் அதிஉயர் பௌத்த பீடாதிபதிகளில் ஒருவரான மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீசுமங்கலத் தேரரை சந்தித்து பேசியுள்ளனர்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் பௌத்த மதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அது குறித்து அரசு மௌனம் காப்பதாகவும் அவர்கள் மல்வத்த பீடாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyERYLXgp7.html#sthash.IcpPSFwD.dpufதமக்கு எதிராக செயல்படும் அமைப்பான ஜாதிகபல சேனாவைச் சேர்ந்த புத்தபிக்கு வட்டரக்க விஜித தேரர் அந்த அமைச்சக அலுவலகத்தில் ஒளிந்திருப்பதாகக் கூறியபடி பொதுபல சேனா அமைப்பினர் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்துக்குள் புகுந்தனர் என்று அமைச்சக அதிகாரிகள் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் குறித்து ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மிகவும் வேதனைப்பட்டதாக அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.
ஜாதிகபல சேனாவின் பிக்கு தமது மதத்துக்கும் தேசத்துக்கும் கேடு விளைவிக்கிறார் என பொதுபல சேனா கூறுகிறது. அவர் அவ்வாறு செய்யக் கூடாது என நேரில் சந்தித்து அறிவுறுத்துவதே தமது நோக்கம் எனவும் பொதுபல சேனாவினர் கூறுகிறார்கள்.
இந்தச் சந்திப்பின்போது, இலங்கையில் பௌத்த மதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அது குறித்து அரசு மௌனம் காப்பதாகவும் அவர்கள் மல்வத்த பீடாதிபதியிடம் தெரிவித்துள்ளனர்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை மாற்றுமாறு சோசலிச கட்சிகள் கோரிக்கை - பொதுபல சேனாவை கைது செய்யுமாறு முஸ்லிம் தலைவர்கள் கோரிக்கை
[ வியாழக்கிழமை, 24 ஏப்ரல் 2014, 01:03.22 AM GMT ]
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் சோசலிச கட்சிகள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுக்கவுள்ளன.
2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை பதவி கவிழ்க்க உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏதேனும் ஓர் காரணத்தினால் ஆட்சிப் பொறுப்பு வேறும் தரப்பிடம் கை மாறினால் நாடு சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கி நகரும்.
அமைச்சர்கள் என்ற ரீதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு ஏற்கனவே கோரியுள்ளோம்.
நாடாளுமன்றிற்கு பொறுப்பு கூறக்கூடிய ஓர் பிரதமரின் தலைமையிலான ஆட்சியொன்றை உருவாக்குவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
சோசலிச கட்சிகளினால் நடத்தப்பட உள்ள மே தினக் கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போதேடி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனாவை கைது செய்து தூக்கிலிடுக – முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்து, தூக்கிலிடுமாறு அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் பொது பல சேனா மேற்கொண்டு வரும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் துணை போகின்றமை தொடர்பிலும் அவர்கள் கண்டனம் வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
ஆனால் இந்த யுத்தத்தில் அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்றும் எதுவும் இல்லை.
அதன் வெளிப்பாடே தற்போதும் இனங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான காரணம் என்று அவர்கள் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்காவை தளமாக கொண்ட பயங்காரவாத ஆராச்சி ஒழுங்கமைப்பு, பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலபடுத்தியுள்ளமையையும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
- See more at: http://www.newstamilwin.com/show-RUmsyERYLXgq1.html#sthash.uOVxQY9P.dpuf2005ம் ஆண்டு மஹிந்த சிந்தனை தேர்தல் வாக்குறுதிகளில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்ட போதிலும், இதுவரையில் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என அமைச்சர் திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
இந்த அரசாங்கத்தை பதவி கவிழ்க்க உள்நாட்டு வெளிநாட்டு ரீதியில் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஏதேனும் ஓர் காரணத்தினால் ஆட்சிப் பொறுப்பு வேறும் தரப்பிடம் கை மாறினால் நாடு சர்வாதிகார ஆட்சி முறைமையை நோக்கி நகரும்.
அமைச்சர்கள் என்ற ரீதியில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்யுமாறு ஏற்கனவே கோரியுள்ளோம்.
நாடாளுமன்றிற்கு பொறுப்பு கூறக்கூடிய ஓர் பிரதமரின் தலைமையிலான ஆட்சியொன்றை உருவாக்குவதே மிகவும் பொருத்தமானதாக அமையும் என திஸ்ஸ விதாரண தெரிவித்துள்ளார்.
சோசலிச கட்சிகளினால் நடத்தப்பட உள்ள மே தினக் கூட்டம் தொடர்பில் விளக்கமளிக்கும் நிகழ்வில் பங்கேற்ற போதேடி அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொதுபல சேனாவை கைது செய்து தூக்கிலிடுக – முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை
பொது பல சேனா அமைப்பைச் சேர்ந்தவர்களை கைது செய்து, தூக்கிலிடுமாறு அரசாங்கத்துடன் இணைந்துள்ள முஸ்லிம் தலைவர்கள் ஜனாதிபதியிடம் கோரி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் பொது பல சேனா மேற்கொண்டு வரும் முஸ்லிம் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் துணை போகின்றமை தொடர்பிலும் அவர்கள் கண்டனம் வெளியிட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 30 வருடங்களாக இடம்பெற்ற யுத்தம் ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது.
ஆனால் இந்த யுத்தத்தில் அரசாங்கம் கற்றுக் கொண்ட பாடங்கள் என்றும் எதுவும் இல்லை.
அதன் வெளிப்பாடே தற்போதும் இனங்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுவதற்கான காரணம் என்று அவர்கள் கூறி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அமெரிக்காவை தளமாக கொண்ட பயங்காரவாத ஆராச்சி ஒழுங்கமைப்பு, பொதுபல சேனா அமைப்பை பயங்கரவாத அமைப்பாக பட்டியலபடுத்தியுள்ளமையையும் அவர்கள் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
Geen opmerkingen:
Een reactie posten