தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 april 2014

7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்! முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை!- அரசியலாக்கக்கூடாது!- ஞானதேசிகன்

கோட்டைக்கல்லாறில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்தவருக்கு விளக்கமறியல் - மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய விமானப்படை வீரருக்கு விளக்கமறியல்
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 09:35.35 AM GMT ]
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு பகுதியில், சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்குட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் இளைஞரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று வியாழக்கிழமை கோட்டைக்கல்லாறில் உள்ள வீட்டில் தனிமையில் இருந்த போது, 15 வயதுடைய சிறுமி 18 வயது இளைஞரால் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக, குறித்த சிறுமியின் பெற்றோரால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.
இதன் கீழ் கோட்டைக்கல்லாறை சேர்ந்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டு நேற்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்ற நீதிபதி முகமட் றியாழ் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது, எதிர்வரும் மே மாதம் 08 ஆம் திகதி வரை குறித்த இளைஞரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதாக களுவாஞ்சிகுடி பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ சிகிச்சைகளுக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பிலான விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய விமானப்படை வீரருக்கு விளக்கமறியல்
பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய விமானப்படை வீரர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாடசாலை செல்வதற்காக பஸ் நிலையத்தில் காத்திருந்த மாணவியை, சந்தேக நபரான விமானப் படை வீரர் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று புத்தளம் நீதிமன்றத்தில் ஆஜர்ப்பட்ட போது அவரை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
புத்தளம் பாலாவி விமானப் படை முகாமில் கடமையாற்றி வந்த வீரரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மாணவியின் பெற்றோர் பொலிஸில் செய்த முறைப்பாட்டை அடுத்து கருவலகஸ்வெவ பொலிஸார் சந்தேக நபரை கைது செய்தனர்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXfo4.html
7 பேரையும் பரோலில் விடுவிக்க வேண்டும்! முதல்வருக்கு ராமதாஸ் கோரிக்கை!- அரசியலாக்கக்கூடாது!- ஞானதேசிகன்
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 10:39.04 AM GMT ]
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் தமிழக அரசு பரோலில் விடுதலை செய்ய வேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை,
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பொய்யாக சேர்க்கப்பட்ட பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து மத்திய அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணையை அதிக நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது.
7 பேரின் விடுதலை தொடர்பாக நல்ல செய்தி வெளிவரும் என்று எதிர்பார்த்திருந்த தமிழர்கள் அனைவருக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்த முடிவு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் அளித்திருக்கிறது.
பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவருக்கும் விதிக்கப்பட்டிருந்த தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தீர்ப்பளித்த உச்ச நீதிமன்றம், இவர்களை விடுதலை செய்வது குறித்து குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 432, 433(ஏ) ஆகிய பிரிவுகளுக்கு உட்பட்டு பொருத்தமான அரசு முடிவு செய்யலாம் என்று கூறியிருந்தது. மாநில அரசின் அதிகார வரம்புக்குள் உள்ள சட்டங்களின்படி தான் இவர்கள் தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி, தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு, பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட ஒருவர் 14 ஆண்டு சிறை தண்டனை அனுபவித்திருந்தால், அவர்களை விடுதலை செய்யலாம் என உச்ச நீதிமன்றம் சுட்டிக்காட்டிய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் 433(ஏ) பிரிவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே, இவர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்க தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது.
இவற்றின் அடிப்படையில் தமிழக அரசு சற்று பொறுப்புடனும், பக்குவமாகவும் செயல்பட்டிருந்தால், பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், இராபட் பயாஸ் ஆகிய ஏழு தமிழர்களும் எப்போதோ விடுதலை செய்யப்பட்டிருப்பார்கள். மாறாக, தமிழக அரசு பொறுப்பின்றி செயல்பட்டதால் தான் 7 தமிழர்களின் விடுதலை மிகவும் சிக்கலான ஒன்றாக மாறியிருக்கிறது.
7 பேரின் விடுதலை தொடர்பான வழக்கை அதிக நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ள உச்ச நீதிமன்றம், இதற்கான அரசியல் சட்ட அமர்வு 3 மாதங்களுக்குள் அமைக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது.
உச்ச நீதிமன்றத்திற்கு விரைவில் கோடை விடுமுறை விடப்படவிருக்கும் நிலையில், அரசியல் சட்ட அமர்வு அமைக்கப்படுவதற்கே இன்னும் பல மாதங்கள் ஆகும். அதன்பின் இந்த வழக்கை இழுத்தடிக்க மத்திய அரசு முயலும் என்பதால் விசாரணை முடிந்து தீர்ப்பு வெளியாக சற்று அதிக காலம் ஆகலாம்.
பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரும் ஏற்கனவே 23 ஆண்டுகளாக கொடுஞ்சிறையில் அடைக்கப்பட்டு அவதிப்பட்டு வரும் நிலையில், மேலும் பல மாதங்கள் அவர்கள் சிறையில் வாட வேண்டும் என்பதே மனித உரிமை மீறல் ஆகும். இத்தகைய சூழலில் 7 தமிழர்களுக்கும் உடனடியாக ஏதேனும் நிவாரணம் வழங்கப்பட வேண்டிய அவசியமாகும்.
இதற்காக இந்திய அரசியல் சட்டத்தின் 161 ஆவது பிரிவைப் பயன்படுத்தி விடுவிப்பது உள்ளிட்ட பல்வேறு வாய்ப்புகள் தமிழக அரசின் முன் உள்ளன. இந்த விவகாரத்தின் தமிழக மக்களின் உணர்வுகளை தாம் மிகவும் மதிப்பதாக தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு தருணங்களில் கூறியிருக்கிறார்.
அது உண்மையாக இருந்தால், குறைந்தபட்ச நிவாரணமாக, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டு காலமாக இருட்டுச் சிறையில் வாடும் 7 தமிழர்களும் வெளியுலக சுதந்திரக் காற்றை அனுபவிக்கும் வகையில் இவர்களை எவ்வளவு காலத்திற்கு சிறை விடுப்பில் (பரோல்) அனுமதிக்க முடியுமோ அவ்வளவு காலத்திற்கு சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
7 பேர் விடுதலை வழக்கு: அரசியலாக்க கூடாது என்கிறார் ஞானதேசிகன்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பான வழக்கை சட்டரீதியாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக்க கூடாது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தெரிவித்தார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று செய்தியாளர்களை சந்தித்த போது இவ்வாறு கூறிய அவர், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தொடர்புடையவர்கள் நிரபராதி என்பதை ஏற்க முடியாது என்றார்.
மூன்று மாதங்களுக்குள் அரசியல் சாசன அமர்வு அளிக்கும் தீர்ப்பை ஏற்க வேண்டும் என்று கூறிய ஞானதேசிகன், இந்த வழக்கை சட்டரீதியாக பார்க்க வேண்டுமே தவிர அரசியலாக்கக் கூடாது என்றார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXfo7.html

Geen opmerkingen:

Een reactie posten