முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் இரு கால்களை இழந்தவருக்கு சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுத்தது - தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் !
முல்லைத்தீவு மாவட்டம் குமாரபுரம் முள்ளியவளையில் வசித்து வருபவர் திரு. சத்தியமூர்த்தி (வயது 40) இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்து முடிந்த முள்ளிவாய்க்கால் யுத்தத்தினால் தனது இரு கால்களையும் இழந்து தனது மனைவியையும், தனது ஐந்து சிறு வயது குழந்தைகளையும் காப்பாற்ற இன்றுவரையும் வாழ்க்கையோடு போராடி வருபவர்.
இவரின் குடும்ப வறுமை நிலையினைக் கவனத்தில் கொண்டு இவரது குடும்பத்தினரை தன்னம்பிக்கையோடு மகிழ்ச்சியாக வாழ வைப்பதற்கு ஒரு சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கி கொடுப்பதற்கு தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் முன் வந்தது.
அந்த அடிப்படையில் அவருக்கு பிடித்த தொழிலாக ஆடு வளர்ப்புத் திட்டத்தினை ஊக்கப்படுத்தி ஆரம்ப கட்டமாக ஒரு இலட்சத்து ஒன்பதினாயிரத்து நானூற்று இருபத்தொன்பது (109429.94- SLR) ரூபா 19-04-2014 அன்று தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையத்தால் வழங்கப்பட்டது.
ஆரம்பகட்டமாக வழங்கப்பட்ட மேற்குறிப்பிடப்பட்ட உதவித் தொகையிலிருந்து முதற்கட்டமாக 6 மாதங்களில் சிறந்த பயன்களை ஆணையத்திற்கு, உருவாக்கி காட்டும் பட்சத்தில் … அவரை மேலும் ஊக்குவித்து முன்னேற்றும் நோக்கமாக முதல் வழங்கப்பட்ட தொகையினை விட அதிகமான உதவித் தொகை வழங்கப்படும் என TPRRC உறுதிபட தெரிவித்திருக்கின்றது.
இவரைப் போன்று இறுதி யுத்தத்தில் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட பெற்றோர்களை இழந்த குழந்தைகள், கணவனை இழந்தபெண்கள் , உடல் உறுப்புகளை இழந்த அங்கவீனர்கள் மற்றும் வறுமையினால் கல்வி கற்க முடியாத சிறார்கள் என அனைவருக்கும் மாதமாதம் மிகவும் பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தினரை தேர்ந்தெடுத்து சுயதொழில் வேலை வாய்ப்பினை உருவாக்கிக் கொடுக்க தமிழ் மக்கள் மறுவாழ்வு உரிமைகள் ஆணையம் முன் வந்துள்ளது.
அன்பினால் அனைவரையும் அரவணைப்போம்.
நன்றி - திசைகாட்டி
Geen opmerkingen:
Een reactie posten