தொலைக்காட்சி

தொலைக்காட்சி

maandag 28 april 2014

அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்து ஆஸி.யில் கோத்தபாய பேச்சு


ஜனாதிபதி மஹிந்த நேரில் கேட்டதன் பேரிலேயே இலங்கைக்கு உதவ முன்வந்துள்ளோம்!- தென்னாபிரிக்கா
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 09:30.48 AM GMT ]
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ச, தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் சூமாவைக் கேட்டுக் கொண்டதன் பேரிலேயே சமாதானத்துக்காக இலங்கைக்கு உதவ தென்னாபிரிக்கா முன்வந்ததாக இலங்கை விவகாரத்தைக் கையாளும் விசேட  பிரதிநிதி சிறில் ரமபோசா தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதத்தில் நடைபெறவிருக்கும் தென்னாபிரிக்க ஜனாதிபதித் தேர்தலின் போது ஜேக்கப் சூமாவின் உதவி ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்பட்டிருப்பவர் சிறில் ரமபோசா.
இலங்கை விவகாரத்தைக் கையாளும் பொறுப்பை ஏற்ற பின்னர் அது தொடர்பாக வெளிப்படையாக அவர் செய்தி வெளியிட்டுக் கருத்துக் கூறியமை இதுவே முதல் தடவையாகும்.
புதிய அரச முறைமை ஒன்றைக் கட்டியெழுப்புவதில் தென்னாபிரிக்காவின் மீளெழுச்சி பல நாடுகளை எம் பக்கம் திருப்ப வைத்திருக்கிறது.
ஜனநாயக விழுமியங்களைப் பேணி, மனித உரிமைகளை மதிக்கும் எமது போக்கினால் மேலும் மதிக்கப்படுகின்றோம். அதனால் இலங்கை உட்பட பல நாடுகள் எம்மை மதித்து நோக்கத் தொடங்கியுள்ளன.
கடந்த வருடம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டிற்கு எமது ஜனாதிபதி ஜேக்கப் சூமா இலங்கை சென்றிருந்த போது, இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச "ஜனாதிபதி சூமா அவர்களே! இலங்கையில் எமது மக்கள் மத்தியில் நிரந்தர சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு உதவ மாட்டீர்களா?" - என்று அவரிடம் வினாவினார்.
இலங்கை மக்களை இணைப்பதில் தென்னாபிரிக்கா முக்கிய பங்காற்றுவதை நாம் விரும்புகின்றோம்." என்றும் அவர் கூறியிருந்தார்.
எங்களது நாட்டைப் பல நாடுகள் 'தோற்றுப் போன நாடாக' முன்னர் கருதின. அத்தகைய நாடுகள் பல இப்போது எங்களின் உதவியை நாடி வருகின்றன.
இலங்கை போன்ற நாடுகள் எம்மை மதித்து எமது உதவியைக் கோரியுள்ளன.
இவ்வாறு இரண்டு நிகழ்வுகளில் பேசும் போது சிறில் ரமபோசா கருத்து வெளியிட்டார்.
அவற்றில் ஒன்று தென்னாபிரிக்காவின் தமிழ் பாரம்பரியக் குடிகளின் வழித்தோன்றல்களின் ஞாயிறு வழிபாடு அங்குள்ள ஶ்ரீ மாரியம்மன் கோவிலில் நடைபெற்றது.
அதன் பின்னர் அங்கு பேசுகையிலேயே ரமபோசா இத்தகவல்களை வெளியிட்டார்.

அகதிகளை திருப்பி அனுப்புவது குறித்து ஆஸி.யில் கோத்தபாய பேச்சு
[ திங்கட்கிழமை, 28 ஏப்ரல் 2014, 03:58.27 AM GMT ]
அவுஸ்திரேலியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, அங்குள்ள போலி அகதிகளை இலங்கைக்குத் திருப்பி அனுப்புவது குறித்து உயர்அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
அவுஸ்திரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் அகதிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், Operation Sovereign Borders என்ற பெயரில் தொடங்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் ஒரு கட்டமாகவே, போலியான அகதிகளைத் திருப்பி அனுப்புவது குறித்து பாதுகாப்புச் செயலருடன் அவுஸ்ரேலியா பேச்சுக்களை நடத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை கன்பராவில் உள்ள ஹயாட் விடுதியில் நடந்த ஆட்கடத்தல் மற்றும் நாடுகடந்த குற்றங்கள் தொடர்பான அவுஸ்ரேலிய - இலங்கை கூட்டுக்குழுவின் இரண்டாவது கூட்டத்தில், பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ தலைமையிலான குழு இலங்கை தரப்பில் கலந்துகொண்டது.
இந்தக் கூட்டத்தில் பேசிய, அவுஸ்ரேலிய குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொறிசன், முன்னைய ஆட்சிக்காலத்தில் அவுஸ்ரேலியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்தவர்களையும் திருப்பி அனுப்புவதில் அவுஸ்ரேலியா உறுதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஏனைய நாடுகள் வழியாக சட்டவரோதமாக அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்தவர்களை எந்தச் சூழ்நிலையிலுவும் அவுஸ்ரேலியா ஏற்றுக்கொள்ளாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர்களைத் திருப்பி அனுப்புவதில் அவுஸ்ரேலியா உறுதியாக இருப்பதாகவும் மொறிசன் தெரிவித்துள்ளார்.
அவுஸ்ரேலியப் பயணத்தை முடித்துக் கொண்டு கொழும்பு திரும்பியுள்ள பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ, அவுஸ்ரேலியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதற்காக நடந்து கொண்டிருந்கும் இந்த நடவடிக்கையால், அவுஸ்ரேலியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான இருதரப்பு உறவுகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
அவுஸ்ரேலியப் பயணத்தின் போது கோத்தபாய ராஜபக்ச, அந்த நாட்டின் உயர்மட்ட அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளை சந்தித்துப் பேசியுள்ளார்.

Geen opmerkingen:

Een reactie posten