முஸ்லிம் பெண் வேடமணிந்து வவுனியா நகரில் சுற்றி திரிந்த புலிகள் உறுப்பினர் ஒருவரை, பொலிஸார் இன்று அதிகாலை 12.15 மணியளவில் கைது செய்துள்ளனர் என்று அறியப்படுகிறது. ஆயுதம் வைத்திருந்தாக குற்றம் சுமத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர் இம் மாதம் முதலாம் திகதி அர்சஸ் நோய் காரணமாக வவுனியா வைத்தியசாலையில் சிறை காவலர்களின் பாதுகாப்பிற்கு மத்தியில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தப்பிச் சென்றுள்ளார்.
இவ்வாறு தப்பிச்சென்றவரே மீண்டும் கைதாகியுள்ளார் என்று பொலிசார் தெரிவித்துள்ளார்கள். வவுனியா குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய ஜெயபாலன் ஸ்டேன்லி ரமேஸ் என்ற நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கைது செய்யப்படும் போது சிவப்பு நிற சுடிதார் அணிந்து தொப்பியணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். தற்போது வவுனியாவில் எந்த தமிழ் இளைஞரைக் கைதுசெய்தாலும், அவர்களை விடுதலைப் புலிகள் என்று முத்திரை குத்திவருகிறது இலங்கை இராணுவம் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.
http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6756
Geen opmerkingen:
Een reactie posten