தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 april 2014

லண்டன் ஊடகவியலாளர் சங்கம் பணத்தை பெற்று உறுப்பினர்களை ஏமாற்றியுள்ளது !


லண்டனை தளமாகக் கொண்டு இயங்கும் "சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம்" (IATAJ)என்னும் அமைப்பு, பல உறுப்பினர்களிடம் பணத்தைப்பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அதன் உறுப்பினர்கள் பலர் அதிர்வு இணையத்திற்கு தெரிவித்துள்ளார்கள். கடந்த 2 வருடங்களாக இந்த ஒன்றியத்தில் உள்ளவர்களிடம் சுமார் 25.00 பவுன்களை, வருடந்தோறும் சந்தாவாகப் பெற்றுக்கொண்ட இந்த அமைப்பு, அவர்கள் எவருக்கும் அடையாள அட்டையை வழங்கவில்லை என்று அறியப்படுகிறது. உறுப்பினர் மற்றும் அடையாள அட்டைக்கான சந்தா என்று சொல்லியே 25.00 பவுன்களை குறித்த அமைப்பு அதன் அங்கத்தவர்களிடம் பெற்றுள்ளது தமது வங்கில் வைப்பிட்டுள்ளார்கள். 

ஆனால் அவர்களில் பலருக்கு அடையாள அட்டை வழங்கப்படவே இல்லை. இதேவேளை இதனைக் காரணம் காட்டி இந்த அமைப்பில் இருந்து விலகிய நபர்களுக்கும் , சந்தா பணத்தை திருப்பி கொடுக்கவும் நிர்வாகம் மறுத்து வருகிறது. இது ஊடகவியலாளர்களை ஒன்றிணைக்க என்று உருவாக்கப்பட்ட சங்கம் ஆகும். ஊடக தர்மத்தை பேணிக்காக்க தாம் பாடுபடுவதாக கூறிவரும் குறித்த இச் சங்கம், இவ்வாறு நடந்துகொள்வது பெரும் மனவேதனை அளிப்பதாக, அதன் உறுப்பினர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். குறித்த இச்சங்கத்தில் ,முன் நாள் ஊடகவியலாளர் பலர் உள்ளதாகவும் அவர்கள் தற்போது எதுவித ஊடகத்திலும் பணியாற்றாத நிலையில், அவர்களில் சிலர் தலைவராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

நாமும் ஒரு ஊடகம் என்ற வகையில், இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதில் மிகவும் வேதனைக்குரிய விடையம் என்னவென்றால், அதிர்வின் நிருபரும் முன்னர் இச்சங்கத்தில் அங்கத்தவராக இருந்துள்ளார். ஆனால் அவருக்கு கூட அடையாள அட்டை வழங்கப்படவில்லை. இதனை எவராலும் தட்டிக் கேட்க முடியாதநிலை காணப்படுகிறது என்றும், ஒரு சிலர் இச்சங்கத்தில் சர்வாதிகாரிபோலச் செயல்படுகிறார்கள் என்றும், உறுப்பினர்கள் மேலும் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6737

Geen opmerkingen:

Een reactie posten