மாத்தளையில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளை அமெரிக்காவுக்கு அனுப்ப திட்டம் !
28 April, 2014 by admin
மாத்தளை வைத்தியசாலையின் வளாகத்தில் இருந்து மீட்கப்பட்ட 155 மனித எலும்புக்கூடுகள் பற்றிய விசாரணைகளை குற்றப்புலனாய்வு பொலிஸார் மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் மரபணு பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகளை மேற்கொள்ளவதற்கு அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்துக்கு அனுப்பிவைப்பதற்கான ஏற்பாடுகள் பொலிஸ் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் கூறினார். அமெரிக்காவுக்கு அனுப்புவதற்கான நீதிமன்ற அனுமதியை பொலிஸ் திணைக்களம் கோரியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன குறிப்பிடடார்.
சிங்கள பெண்கள் குத்தாட்டத்தோடு டக்ளஸ் திறந்துவைத்த அலுவலகம் !
28 April, 2014 by admin
வவுனியாவில் வாழ்வின் எழுச்சி அலுவலகத்தை டக்ளஸ் நேற்றைய தினம்(27) அன்று திறந்துவைத்தார். சிங்கள் மற்றும் தமிழ் பெண்கள் குத்தாட்டம் போட , பாரிய ஆரவாரத்தோடு அவர் இந்த அலுவலகத்தை திறந்துவைத்தார் என்று மேலும் அறியப்படுகிறது. இதில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், ஆழுனர் சந்திர ஸ்ரீ, வட மாகாண அரச அதிபர்களும் கலந்துகொண்டார்கள். பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் கீழ், வாழ்வின் எழுச்சி அலுவலகம் இயங்க இருப்பதாக டக்ளஸ் மேலும் தெரிவித்துள்ளார். இராணுவப் பிரசன்னம் அதிகமாக கணப்படும் வன்னியில், மக்கள் சகஜமாக வாழ்வதே மிகவும் கடினமாக உள்ளது. இன் நிலையில் வாழ்வின் எழுச்சி என்று கூறி அலுவலகங்களை அரசாங்கம் திறந்து வைப்பது பெரும் வேடிக்கையான விடையம் என்று சிலர் கருத்து தெரிவித்துள்ளார்கள். புகைப்படங்கள் இணைப்பு.



| http://www.athirvu.com/target_news.php?getnews=news&action=fullnews&showcomments=1&id=6749
Geen opmerkingen:
Een reactie posten