மும்பையை சேர்ந்த தேஜாவு (31) என்ற பெண், கமிஷ்னர் ராகேஷிடம் அளித்துள்ள புகாரில், மாதேஷ் சிங் என்ற பொலிஸ் அதிகாரி, கடந்த 2005ம் ஆண்டு என்னை கற்பழித்தார்.
மேலும், அதன் பிறகு போதை பொருள் தடுப்பு பிரிவில் பொலிஸ் இன்பார்மராக சேர்த்த என்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி பலமுறை உறவு கொண்டார்.
பின்னர் ஒரு கட்டத்தில் எனது வீட்டிற்கு வர ஆரம்பித்த அவர் ஒவ்வொரு முறையும் மிரட்டி என்னை கற்பழித்தார்,
2011ம் ஆண்டு அவர் என்னை திருமணம் செய்ய சம்மதித்தார். நான் அவரது வீட்டுக்கு அழைத்து செல்லும் படி கூறினேன். ஆனால் அதற்கு அவர் மறுத்தார். அப்போது தான் அவர் திருமணமானவர் என்பது தெரிந்தது.
இவரால் நான் இதுவரை, 8 ம் முறை அறுவை சிகிச்சை மூலம் கருக்கலைப்பு செய்துள்ளேன், மேலும் 15 முறை மாத்திரை மருந்து மூலம் கருகலைப்பு செய்துள்ளேன்.
மேலும் இதுதொடர்பாக பொலிஸ் நிலையத்தில் பலமுறை புகார் கொடுத்துள்ளேன், ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, என்று கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கமிஷனர் உத்தரவின் பேரில் மும்பை குற்றப்பிரிவு பெண் பொலிசார் அவரது வாக்குமூலத்தை பதிவு செய்தனர்.
மேலும் பொலிஸ் அதிகாரி குறித்து விசாரணை நடத்த கமிஷனர் தனி குழுவை நியமித்து உள்ளார்.
|
Geen opmerkingen:
Een reactie posten