மனித உரிமை மீறல் பிரச்சினைகள் தொடர்பில் உள்ளக ரீதியான பொறிமுறைமை ஒன்றின் அவசியத்தையே இந்தியா வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்துள்ளார். நாடுகளின் மனித உரிமை தொடர்பிலான பிணக்குகளுக்கு உள்ளக ரீதியான பொறிமுறைமை ஒன்று அமைக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய ரீதியான நிறுவனங்களின் ஊடாகவே மனித உரிமைப் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் தொடர்பான வாக்கெடுப்பில் இந்தியா பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தேசிய ரீதியான நிறுவனங்களின் ஊடாகவே மனித உரிமைப் பாதுகாப்பு மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவின் இறுதி அறிக்கைப் பரிந்துரைகளை அமுல்படுத்துவதன் மூலம் நிரந்தரமான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்சிக்கும் இடையில் விரைவில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட வேண்டியது அவசயிமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வு மற்றும் அரசியல் தீர்வுத் திட்டத்தின் மூலம் குற்றச் செயல்களுக்கு தண்டனை விதித்தல் தொடர்பான பிணக்குகளுக்கு காத்திரமான தீர்வுத் திட்டங்களை முன்வைக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானமானது நாட்டின் இறைமையை உதாசீனம் செய்யும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் உள்ளிட்ட அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காத்திரமான ஓர் தீர்வுத் திட்டமொன்றை முன்வைக்க வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/64392.html
Geen opmerkingen:
Een reactie posten