தொலைக்காட்சி

தொலைக்காட்சி

donderdag 24 april 2014

நெடியவன் மீது இன்டர்போல் சிவப்பு ஆணை குறித்து நோர்வே ஆராய்கிறது

இலங்கையில் விடுதலைப்புலிகளின் மீள் உருவாக்கத்துக்கு முயற்சிப்பதாக அரசாங்கம் குற்றம் சுமத்தும் நெடியவன் என்ற பேரின்பநாயகம் சிவரூபனுக்கு எதிராக இன்டர்போல் என்ற சர்வதேச பொலிஸ் விதித்துள்ள சிவப்பு ஆணை குறித்து நோர்வே அரசாங்கம் ஆராய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் என்ஆர்கே ஒலிபரப்பின் செய்தியின்படி நோர்வேயின் வெளியுறவு அமைச்சின் செயலாளர் மோர்டென் ஹக்லன்ட் இது தொடர்பில் இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோர்வேயின் வெளியுறவு அமைச்சு, இலங்கையின் தூதுவருடன் இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக மோர்டென் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே சிவரூபன் 2011ம் ஆண்டு நோர்வேயில் ஒஸ்லோவில் கைது செய்யப்பட்டு விடுதலைப் புலிகளின் நிதியாள்கை குறித்து விசாரிக்கப்பட்டார்.
எனினும் பின்னர் நிபந்தனையின்பேரில் அவர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
http://www.tamilwin.com/show-RUmsyERYLXgu3.html

Geen opmerkingen:

Een reactie posten