[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 11:27.22 AM GMT ]
நெடியவனை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வருவது தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நோர்வே இராஜாங்க செயலாளர் மோரன் ஹொன்லபட் தெரிவித்துள்ளதாக திவயின குறிப்பிட்டுள்ளது.
நெடியவன் பயங்கரவாதத்திற்காக நிதி திரட்டியுள்ளதாக நெதர்லாந்து பொலிஸார் உறுதிப்படுத்தி, 6000 ஜிகாபைட் இரகசிய தகவல்களை நோர்வே அரசாங்கத்திடம் சமர்பித்துள்ளமையே இதற்கான காரணமாகும்.
கோனிக் என்ற நடவடிக்கையின் கீழ் நெடியவன் நிதி திரட்டிய விதம் பற்றி அறிந்து கொண்டதாக நெதர்லாந்து பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
நெடியவனின் சகாக்களான கோபி, தேவியன், அப்பன் ஆகியோர் அண்மையில் இலங்கை இராணுவத்தின் தாக்குதலில் கொல்லப்பட்டதாகவும் கூறியுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfuz.html
நெடியவனுக்கு எதிரான பிடிவிராந்தை இணையத்தில் வெளியிட்ட இன்டர்போல்
[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 06:43.43 AM GMT ]
நெடியவன் தற்போது நோர்வேயில் வசித்து வருவதாக கூறப்படுகிறது. இன்டர்போலின் பிடிவிராந்து அதன் இணையத்தளத்தில் வெளியிடப்படும் வரை காத்திருப்பதாக நோர்வே அதிகாரிகள் இந்த வாரம் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கை பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹன,
நெடியவன் தொடர்பான விபரங்கள் இன்டர்போலுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. தற்போது அவர்கள் அதற்கான முனைப்புகளை மேற்கொள்ள முடியும் எனக் கூறியுள்ளார்.
இன்டர்போல் தனது இணையத்தளத்தில் நெடியவனுக்கு எதிரான சிகப்பு அறிக்கையை வெளியிட்டுள்ளதுடன் இலங்கையில் பயங்கரவாதம் தொடர்பில் தேடப்படும் நபர் எனக் குறிப்பிட்டுள்ளது.
நெடியவன் உட்பட 430 தனிப்பட்ட நபர்கள் மற்றும் அமைப்புகளை பயங்கரவாதத்துடன் சம்பந்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தி ஐ.நா சட்ட விதிகளுக்கு அமைய அரசாங்கம் தடை செய்தது.
நெடியவன், இலங்ககையில் விடுதலைப் புலிகளுக்கு மீண்டும் உயிரூட்ட தீவிரமாக செயற்பட்டு வருவதாகவும் அண்மைய சம்பவங்களுடன் தொடர்புடைய முன்னாள் புலிகளின் உறுப்பினரான கோபியுடன் நெடியவன் தொடர்புகளை கொண்டிருந்ததாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
(Interpol web) http://www.interpol.int/notice/search/wanted/2012-4907
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfs0.html
Geen opmerkingen:
Een reactie posten