தொலைக்காட்சி

தொலைக்காட்சி

zondag 27 april 2014

இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த சிரில் ராமபோசா தகுதியான நபர்: கேணல் ஹரிஹரன் !


இலங்கையில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தினையும் ஏற்படுத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தென் ஆபிரிக்காவின் சிரில் ராமபோசா அதற்கு தகுதியான நபர் என கேணல் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.
ஆங்கில இணையத்தளமொன்றிற்கு அவர் அளித்த பேட்டியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் துணைத்தலைவரான ராமபோசா மத்தியஸ்தராக பணியாற்ற தகுந்த மனிதர்.
இனவெறி ஆட்சி முடிவுற்ற பின்னர் பிரட்டோரியாவில் தேசிய கட்சி அரசுடன் நடைபெற்ற பேச்சுக்களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸின் பேச்சுக்குழுவிற்கு தலைமை தாங்கியவர்.
மேலும் அவர் இனவெறி ஆட்சிக்கு பின்னரான அரசியலமைப்பு சட்டத்தினை இறுதி செய்த தென் ஆப்பிரிக்க சட்டமன்றத்தின் தலைவராக இருந்நவர் இப்போது இவர் ஒரு வலிமையான ஜனாதிபதி வேட்பாளர்.
கிளர்ச்சியாக இருந்தாலும் சரி, இணக்க முயற்சியாக இருந்தாலும் சரி நீண்ட காலமாகவே ஸ்ரீலங்கா தமிழர் பிரச்சினையை தீர்ப்பதில் எந்த ஒரு வெளிநாட்டு முனைப்புக்கும் எதிராகவே இருந்திருக்கிறது.
ஆனாலும் 1983 முதல் 90 வரையிலான இந்தியாவின் அரசியல் இராணுவ தலையீடுகள் எதிர்பார்த்த விளைவுகளை தருவதில் தோல்வியடைந்தயைடுத்து இந்திய தலையீடுகள் மௌனிக்கப்பட்டருந்த போதிலும் இந்தியா இதற்கு விதிவிலக்காக உள்ளது.
அத்துடன் நோர்வே தலைமையிலான முனைப்புகளும் சிறப்பானதாக இருக்கவில்லை.
தென் ஆபிரிக்க வடிவிலான நல்லிணக்கம் குறித்த விடயத்தில் ஸ்ரீலங்கா 2010 ஆண்டு வரையில் கூட தனது தயக்கத்தினை வெளிப்படுத்தியிருந்தது.
அக்காலப் பகுதியிலான பி.பி.சி அறிக்கையின்படி எல்.எல்.ஆர்.சி ஆனது தென்னாபிரக்காவின் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவினை போன்றதா என கேட்கப்பட்ட கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போது ஊடக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அதனை ஒரு புதிய அனுபவம் என குறிப்பிட்டிருந்தார்.
அரசாங்கம் தனித்துவமான அணுகுமுறையினை கையாள இருக்கிறது அதாவது இந்த நாட்டின் ஈழப்பிரச்சினையிலிருந்து கற்றுக்கொண்ட பாடங்களினூடாக நல்லிணக்க விடயத்தில் எம்மால் உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டிருந்தார்.
மனிதஉரிமை மீறல்கள் குறித்த தனது தோல்வியடைந்த “தனித்துவமான” அணுகுமுறையினால் அடுத்தடுத்து ஐநா மனிதஉரிமை ஆணைக்குழுவின் முன் நிறுத்தப்பட்டதன் பின்னராவது ஸ்ரீலங்கா தனது இறுக்கமான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும்.
ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் ஆய்வுகள் நல்லிணக்கம் மற்றும் பொறுப்பு கூறல் குறித்த சிக்கல்களை தீர்ப்பதில் ஸ்ரீலங்காவின் எல்.எல்.ஆர்.சி. நடைமுறைகளில் உள்ள குறைகளை அம்பலப்படுத்தியுள்ளது.
உண்மையில் ஒரு வகையான சாதக தன்மையினை பெறும் நோக்கில் தென் ஆபிரிக்காவினை இந்த செயற்பாடுகளில் ஈடுபடுத்த இது ஜனாதிபதி ராஜபக்சவை தூண்டியுள்ளது.
தென் ஆபிரிக்க முனைப்புகள் அடுத்த மாதம் ராம்போசா கொழும்பு சென்ற பின்னரே வடிவம் பெற வாய்ப்புள்ளது.
ஆகவே இந்த முனைப்புகள் பற்றி இந்தியாவின் பதில்நடவடிக்கை குறித்து இப்போது பேசுவது சாத்தியமில்லை. அதே நேரம் ஜனாதிபதி ராஜபக்சவினால் கையாளப்பட்ட தவறான உத்திகளால் காலம் தாழ்ந்து நின்றுபோன நல்லிணக்க செயற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதன் தேவை குறித்து இந்தியா அழுத்தம் கொடுத்து வந்திருக்கிறது.
ஜனாதிபதி ராசபக்ச இது விடயத்தில் ஆலோசனை வழங்கவென, இன்னும் பிறிதொரு பாராளுமன்ற தெரிவு ஆணைக்குழு ஒன்றினையும் அமைத்துள்ளார்.
த.தே.கூ உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் பராளுமன்ற தெரிவு ஆணைக்குழுவினை மறுதலித்ததுடன் அது தனது ஆலோசனைகளை இறுதிசெய்ய முன்னரே செயலற்று போனது.
நல்லிணக்கத்திற்கான அரசியல் செயற்பாடுகளை ஆரம்பிப்பதுடன் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு அடிப்படையான 13 வது திருத்தச்சட்டத்தினை முழுமையாக அமுலாக்கம் செய்வதையே இந்தியா வலியுறுத்தி வருகிறது.
இலங்கை குறித்து நடைபெற்ற கடந்த ஐநா மனித உரிமைகள் கலந்தாய்வு கூட்டத்தில் இந்தியாவின் பிரதிநிதி திலிப் சின்கா இந்தியாவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியதுடன் அர்த்தமுள்ள அதிகாரப்பரவலாக்கம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் நிறையவே செய்யவேண்டியுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் சிறுபான்மையினருடன் அர்த்தமுள்ளதும் பரந்துபட்டதும் ஆழமானதுமான உண்மையான நல்லிணக்கத்திற்கு நடவடிக்ககைகளை தொடர்ந்து முன்னெடுப்பது அவசியமானது.
சிறிலங்காவின் நெருங்கிய அண்டை நாடாக ஆயிரக்கணக்கான வருடங்கள் நல்லுறவை பேணிவந்த நாம் அந்த நாட்டின் வளர்ச்சியில் தீண்டத்தகாதவர்களாக இருந்துவிட முடியாது.
தென் ஆபிரிக்க மத்தியஸ்தம் நல்லிணக்கத்தினை கொண்டுவருமானால் இந்தியாவிற்கும் மகிழ்ச்சி. வரலாற்று ரீதியாக காலணித்துவ முதலாளிகளுக்கு எதிரான போராட்டத்தினை பகிர்ந்து கொண்டதிலிருந்து இந்தியா தென் ஆபிரிக்காவுடன் மிகச்சிறந்த நல்லுறவினை கொண்டுள்ளது.
எனவே இலங்கையில் அரசியல் நல்லிணக்க செயற்பாடுகளை தூண்டிவிடுவதில் தென் ஆபிரிக்கா தன்னை ஈடுபடுத்திக் கொள்வதை இந்தியா எதிர்க்க வாய்ப்பில்லை.
எனினும் தென்னாபிரிக்கா இலங்கையில் தனது மத்தியஸ்தத்தினை ஏற்கும்போது தகவல் பரிமாற்ற தொடுப்பில் இந்தியாவினையும் கொண்டிருக்க வேண்டும் என நாம் எதிர்பார்க்க இயலும்.
மற்றொரு கோணத்தில் தந்திரோபாய அடிப்படையில் ஸ்ரீலங்காவில் தென் ஆபிரிக்க உள்நுளைவு என்பது இந்தியாவின் ஆதிக்கம் கவிழ்ந்த பகுதியாக கருதப்பட்டுவந்த பகுதியில் மற்றுமொரு புறசக்தியின் ஆதிக்கத்தினை அறிமுகப்படுத்துகிறது.
இரண்டு முகங்களில் இந்தியாவின் ஆதிக்கம் அதிவேக மாற்றங்களை கண்டுவருகிறது. தெற்காசியாவில் (இந்தியா உட்பட) சீனாவின் உள்நுளைவு மற்றும் மேற்குலக கொள்கைகளை நடைமுறைப்படுத்தியதனால் தென்கிழக்கு ஆசிய நாடுகளில அதிகரித்து வருகின்ற இந்திய நலன்கள் பாதிக்கப்படும்.
எவ்வாறாயினும், விரைவில் ஒரு புதிய அரசு டெல்லியில் அதிகாரத்திற்கு வரும்வாய்ப்பு தென்படுகிறது.
குறைந்தபட்சம் இலங்கை பற்றிய இந்தியாவின் கொள்கை அதன் கருத்தியலிலன்றி, வடிவத்திலாவது ஒரு சிறு மாற்றத்திற்கு உள்ளாக வாய்ப்பு உள்ளது. ஆகவே இந்த கட்டத்தில் இந்தியாவின் பதில் நடவடிக்கைகளை பற்றி எதிர்வுகூறுவதை விடவும் வளர்ச்சிநிலை தோன்றுவதால் நிலமைகளை அவதானிப்பதே சிறந்தது.
கடந்த காலத்தில் இந்திய மற்றும் நோர்வேஜிய அனுபவங்ளை ஆராய்ந்து பார்க்கும் போது தென் ஆபிரிக்க மத்தியஸ்தர்கள் கடுமையான பணியினை எதிர்கொள்வார்கள்.
ஆனால் மற்றவர்களைப் போலல்லாமல் அதிஸ்டவசமாக தென் ஆபிரிக்கா பிரபாகரனோடோனோ விடுதலைப்புலிகளோடோ பேசவேண்டியதில்லை. அது த.தே.கூ உடன் பேசவேண்டியுள்ளது. த.தே.கூ நல்லிணக்க செயற்பாடுகள் வெற்றியடைய வேண்டுமென நினைக்கும் மிதவாத அலகுகளை கொண்டுள்ளது.
இதுவே இலங்கைக்கும் பொருந்தும். அதாவது இலங்கை ஜனாதிபதி  ராஜபக்ச மாறுபட்ட அணுகுமுறையினை ஏற்பதில் தடையை ஏற்படுத்தக்கூடிய போருக்கு பின்னரான வெற்றி மமதையின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு தனது அணுகுமுறை பற்றி அவர் மறுயோசனை செய்து பார்க்கவேண்டும்.
அரசாங்கமும் த.தே.கூ உம் தமது பாழ்பட்ட சித்தாந்தங்களிலிருந்து விலகி நல்லிணக்கத்தினை நோக்கி முன்னகர தயாராக வேண்டும்.
இங்குதான் தென் ஆபிரிக்கா பெரும் சிக்கல்களை சந்திக்கக் கூடும். இது தவிர நல்லிணக்க செயற்பாடுகள் தொடர்பான கட்டமைப்பு விடயங்களும் உள்ளது.
ஒருவேளை தென் ஆபிரிக்கா தனது உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் மாதிரி அடிப்படையில் ஒரு தீர்வினை முன்வைத்தால் அது இலங்கைக்கு ஏற்கத்தக்கதாக இருக்காது.
தென் ஆபிரிக்காவில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவில் பங்குபற்றியவரும் ஐநா மனிதஉரிமை ஆணையத்தின் உயர்ஸ்தானிகருமான திருமதி. நவநீதம்பிள்ளை கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட தனது மனித உரிமை பற்றிய வருடாந்த அறிக்கையில், பாலினம் குறித்த மீறல்கள் அடங்கலாக போர்க்குற்றம்,  இன அழிப்பு,  மனித உரிமை மீறல்கள் போன்றவற்றிற்கு குற்றவியல் ரீதியாக பொறுப்பானவர்களை தண்டிப்பதிலிருந்து பாதுகாப்பதற்கு தேவையானவற்றை வழங்குவதற்கு எந்த ஒரு உண்மை பொறிமுறையையும் அனுமதிக்க இயலாது என விளக்கியுள்ளார்.
இலங்கையில் இவ்வாறான கட்டுப்பாடுகளை ஏற்க தயாராக இருந்தாலன்றி உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நடைமுறைச் சாத்தியமாகாது.
அப்படியான உண்மை ஆணைக்குழுக்கள் எதுவாயினும், தண்டனைகள், தண்டம், பொறுப்பேற்றல் மற்றும் ஏனைய பொறுப்பு கூறுதல்களகள், அல்லது மறுசீரமைப்பு திட்டப்பணிகள் ஆகியவற்றை உள்ளடக்கிய செயற்பாடுகளையும் எளிமையான சமாந்திரமான இடைக்கால நீதிப்பொறி முறைகளையும் கொண்டதாக அமைய வேண்டும்.
பயனுள்ள விளைவுகளை பெறுவதற்கு தென்னாபிரிக்க மத்தியஸ்தர்கள் இந்த முக்கியமான விடயங்களை உள்ளடக்கிய ஒரு மாதிரியினை வரைய வேண்டும் என ஹரிஹரன் கூறியுள்ளார்.
தென் ஆபிரிக்க ஜனாதிபதி ஜாக்கோப் ஜூமா, சிரில் ராம்போசாவை ஸ்ரீலங்காவிற்கான தமது தூதராக நியமித்துள்ளார். மேலும் நிலைமைகளை அறிந்துகொள்ள அடுத்த மாதம் அவர் ஸ்ரீலங்கா வரவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Geen opmerkingen:

Een reactie posten