கைதடியிலுள்ள வடமாகாண சபைக் கட்டிடத் தொகுதியில் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம் தலைமையில் நேற்று இடம்பெற்ற மாகாண சபைக் கூட்டத்தொடரில் 22 பிரேரணைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நிறைவேற்றப்பட்ட பிரேரணைகளின் விபரம் பின்வருமாறு,
1. வவுனியா சிதம்பரபுரம் நலன்புரி நிலையத்திலுள்ள மக்களை அவ்விடத்தில் காணிகளை பகிர்ந்தளித்து மீளக்குடியமர்த்த வேண்டும்.
2. யாழ். மாநகர சபையின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில் ஒரு வருட காலம் பதவி நீடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சட்ட ஏற்பாடுகளுக்கமைய உடனடியாக மாநகர சபை தேர்தலை நடத்துமாறு உள்ளுராட்சி அமைச்சினைக் கோருதல்
3. யாழ். பல்கலைக்கழக கற்கை நெறிகள் சில வவுனியாவில் இடம்பெற்றது. அது தற்போது நிறுத்தப்பட்டுள்ளது இது மீள ஆரம்பிப்பதற்கு கோருதல்.
4. யாழ். பல்கலைக்கழகத்திற்குள் இராணுவம், பொலிஸார், புலனாய்வுதுறையினர் அத்துமீறி நுழைவதினை கண்டித்தல்.
5. வடமாகாணத்திற்கு உட்பட்ட சகல தினைக்களங்களிலும் அரசியல் தலையீட்டுக்கு அப்பால் சுதந்திரமான கணக்குப் பரிசோதனையினை நடைமுறைப்படுத்துமாறு வடமாகாண கணக்குப் பரிசோதகர்களை கோருதல்.
6. வட மாகாண நிகழ்வுகளில் தேசியக்கொடிகளுடன் மாகாணக் கொடியும் ஏற்றப்பட வேண்டுமெனவும் தமிழில் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமெனவும் அறிவுறுத்தல்.
7. வடக்கு மாகாணத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட அனைத்து ஊர்கள், வீதிகளின் பெயர்கள் மறுபடியும் எமது புராதன பெயர்களுக்கு அமைவாக மாற்றப்பட வேண்டும்.
8. வட பகுதியை நோக்கி வரும் புகையிரத சேவை மாங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள புகையிரத நிலையத்தில் தரித்து நின்று மக்களை ஏற்றுவதில்லை. இந்நிலையத்தில் புகையிரதம் தரித்த நின்று செல்ல வேண்டுமென மத்திய போக்குவரத்து அமைச்சைக் கோருதல்.
9. முல்லைத்தீவில் கலை கலாச்சார மண்டபத்தை அமைக்குமாறு மத்திய கலை கலாச்சார அமைச்சை கோருதல்.
10. முல்லைத்தீவில் ஆசிரியர் வள நிலையமும் கணிணி பயிற்சி நிலையமும் அமைத்து தருமாறு மத்திய, மாகாண கல்வி அமைச்சினைப் கோருதல்.
11. பயங்கரவாத தடைச்சட்டதை இரத்து செய்யுமாறு பாராளுமன்ற ஆளுங்கட்சி, மற்றும் எதிர்கட்சி தலைவர்களைக் கோருதல்.
12. உள்ளுர் கள்ளு சந்தையினை ஊக்குவிக்குமாறு கூட்டுறவாளரர்களை கோருதல்.
13. 2009 ஆண்டு பகுதியில் இடம்பெயர்ந்து மீளக்குடியேறிய மக்களுக்கு வழங்கப்படாத கொடுப்பனவுகளை பெற்றுக் கொடுப்பதற்கு மத்திய மீள்குடியேற்ற அமைச்சினைக் கோருதல்.
14. முள்ளிவாய்க்கால், கொக்குளாய் பகுதி மீனவர்களுக்கான இறங்குதுறையினை பொருத்தமான இடத்தில் அமைத்துக் கொடுக்க மத்திய கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சினைக் கோருதல்.
15. தமிழ் இளைஞர், யுவதிகள் மீது இராணுவத்தினர் செய்யும் செயல்கள் குறிப்பாக ஆட்சேர்பினை இச்சபை கண்டிக்கிறது.
16. யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ், இலக்கிய பாடங்களை பிரதான பாடங்களாக தெரிவு செய்யும் மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும். இதற்கான பொறிமுறைகளினை மாகாணசபை கையாள வேண்டும்.
17. தமிழர்களது புராதன இடங்களை சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு மாகாணசபை வழிவகுக்குமாறு கேட்டுக்கொள்ளல்.
18. இலங்கைக்கு எதிரான போர்குற்ற விசாரணைக்கு ஆதரவு தெரிவித்த ஜக்கிய நாடுகள் சபைக்கும் நவநீதம் பிள்ளைகளுக்கு நன்றி தெரிவித்தல்.
19. இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட அமெரிக்கத் தீர்மானத்தினை ஏற்று வாக்களித்த அனைத்து நாடுகளுக்கும் நன்றி தெரிவித்தல்.
20. ஐக்கிய நாடுகள மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளும் ஏனைய நாடுகளும் மனிதாபிமானத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட குற்றங்களுக்கு சர்வதேச விசாரணை கோருதல்.
21. இலங்கை தமிழ்த் தேசிய இனப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண சர்வதேச ஒத்துழைப்புத்தேவையென்பதினை வலியுறுத்தல்
22. புலம்பெயர் நாடுகளில் இயங்கும் தமிழ் அமைப்புக்களையும் தனிநபர்களையும் தடை செய்தமையை இலங்கையின் ஜனநாயக விரோதச் செயல் என்றும் அதற்குத் தீர்வு காண சர்வதேச சமூகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் அந்த பிரேரணையை வாபஸ் பெறவேண்டும்.
http://www.tamilwin.com/show-RUmsyERdLXex1.html
Geen opmerkingen:
Een reactie posten