குருநகர் கடற்கரை வீதியைச்சேர்ந்த அருளானந்தன் டினேஷ்குமார் 28 வயது என்பவரே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். கோபி மற்றும் தேவியன், அப்பன் ஆகியோருக்கு உதவியதாகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோபியின் தொலைபேசி அழைப்பினை சோதனை செய்த போது, கோபி, தேவியன் மற்றும் அப்பன் ஆகியோருக்கு உதவி செய்தார் என்ற அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசாரணைக்கென யாழ்.நாவலர் வீதியிலுள்ள ரி.ஜ.டி அலுவலகத்திற்கென அழைக்கப்பட்ட இளைஞனொருவனை ,நெடுங்கேணியில் வைத்து கடந்த 11 ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபியின் உறவினர் எனக்கூறி பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
விசாரணைக்கென சென்ற வேளை கைது செய்யப்பட்ட அவரை கொழும்பு பயங்கரவாத குற்றத்தடுப்பு அலுவலகத்திற்கு கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
http://www.jvpnews.com/srilanka/66942.html
முகமாலையில் மிதி வெடி அகற்றிய பணியாளர் படுகாயம்!
முன்னைய இராணுவ முன்னரங்கப்பகுதியான முகமாலை பிரதேசத்தில் வெடிபொருட்களை அகற்றிக்கொண்டிருக்கும் போது எதிர்பாராத விதத்தில் வெடித்ததில் பணியாளர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். கிளிநொச்சி, கோணாவில், காந்தி கிராமத்தைச்சேர்ந்த சிறிகுமார் சிறிநாத் வயது 31 என’பவரே படுகாயமடைந்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/66945.html
Geen opmerkingen:
Een reactie posten