[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 11:05.10 AM GMT ]
மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கு பதிலாக நாடாளுமன்ற அதிகாரத்தை வழங்கும் முறைமையை ஸ்தாபிக்க வேண்டும் என்பதே அரசாங்கத்திலும் எதிர்க்கட்சிகளிலும் பெருபாலானவர்களின் நிலைப்பாடாக உள்ளது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சியை ரத்துச் செய்வதற்கான இணக்கப்பாடுகளை எட்டுவதற்காக எதிர்காலத்தில் நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த எண்ணியுள்ளதாகவும் வாசுதேவ குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் லங்கா சமசமாஜ கட்சி ஆகியன இந்த விடயம் தொடர்பில் வாசுதேவ நாணயக்காரவுடன் இணைந்து செயற்பட்டு வருகின்றன.
இது சம்பந்தமாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வாசுதேவ நாணயக்கார தயாராகி வருகிறார்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXft7.html
பாடசாலைகளுக்கு சென்று புகைப்படம் எடுத்த படையினர்!- இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம்
[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 02:42.16 PM GMT ] [ பி.பி.சி ]
பாடசாலைகளில் கல்விச் செயற்பாடுகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் இது நடைபெற்றிருப்பதனால், அந்தப் பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டதுடன், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அச்சமடைந்துள்ளதாக ஆசிரியர்களும் பெற்றோர்களும் தெரிவித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பாடசாலைகளைச் சேர்ந்த அதிபர்கள், தமது மேலதிகாரிகளுக்கு முறையிட்டிருக்கின்றார்கள்.
வலயன்கட்டு காக்கையன்குளம் உள்ளிட்ட பாடசாலைகளில் இந்தச் சம்பவம் நடைபெற்றிருப்பதாகத் தங்களுக்கு அறிவிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர்.
ஆசிரியர் சங்கம் கண்டனம்
இந்தச் சம்பவத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டித்திருக்கின்றது.
இதுபற்றி கருத்து வெளியிட்ட அந்தச் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்,
யுத்தம் முடிவடைந்த பின்னர், யுத்தம் நடைபெற்ற பகுதிகளில் அமைதி நிலவுகின்ற நேரத்தில் இவ்வாறு பாடசாலைகளில் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களை அச்சமடையச் செய்யும் வகையில் படையினர் நடந்து கொண்டிருப்பதாகக் கூறினார்.
பாடசாலை நேரத்தில் நடைபெற்ற இந்த சம்பவங்கள் காரணமாக பாடசாலைச் சூழலில் பதற்ற நிலைமை உருவாகியிருப்பதாகவும், இதனால் அங்கு கல்விச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
பாடசாலைகள் பற்றிய விபரங்கள் தேவைப்பட்டால், மாகாண கல்வி அமைச்சின் செயலாளரிடம் பெற்றுக் கொள்வதே முறையாகும்.
அவ்வாறில்லாமல், பாடசாலைகள் நடைபெறும் நேரத்தில் படையினர் அங்கு சென்று இவ்வாறு நடந்து கொள்வது தவறான காரியமாகும் என்றும் அவர் கூறினார்
இதனைத் தடுத்து நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கோரியிருப்பதாகவும், வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரும், குறிப்பாக வடமாகாண முதலமைச்சரும் உடனடியாக உரிய கவனம் செலுத்த வேண்டும் என்றும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கோரியுள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfvz.html
Geen opmerkingen:
Een reactie posten