தொலைக்காட்சி

தொலைக்காட்சி

vrijdag 25 april 2014

போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை! இலங்கை பொறுப்புக்கூற வேண்டும்!- ஐ.நா.சபை

நாடாளுமன்ற வாக்கெடுப்பில் இருந்து நழுவிய விஜயகலா
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 01:08.46 PM GMT ]
இலங்கையின் பிரபல கசினோ சூதாட்ட வர்த்தகரும் போக்குவரத்து அமைச்சின் செயலாளருமான தம்மிக பெரேரா, கொழும்பு டி. ஆர். விஜேவர்தன மாவத்தையில் கசினோ சூதாட்ட நிலையத்துடன் கூடிய ஹொட்டல் ஒன்றை நிர்மாணிக்க உள்ளார்.
இந்த ஹொட்டல் நிர்மாண திட்டம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் மீதான வாக்கெடுப்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜயகலா மகேஸ்வரன் மற்றும் புத்திக பத்திரண ஆகியோர் கலந்து கொள்ளாது தவிர்த்து கொண்டதாக கூறப்படுகிறது.
செயல் நுணுக்க அபிவிருத்தி சட்டமூலத்தின் தீர்மானகரமான தன்மையை கவனத்தில் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களையும் 24 ஆம் 25 ஆம் திகதி கட்டாயம் சமூகமளிக்க செய்ய வேண்டும் என அந்த கட்சி தீர்மானித்திருந்தது.
எதிர்க்கட்சியின் பிரதான கொறடாவான நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க இது குறித்து சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் மூலமும் வாய்மொழி மூலமாகவும் அறிவித்திருந்தார்.
விஜயகலா மகேஸ்வரன் மற்றும் புத்திக பத்திரண ஆகியோர் நேற்று மதியம் வரை நாடாளுமன்றத்தில் இருந்ததுடன், வாக்கெடுப்பு நடத்தும் போது இருவரும் அங்கிருக்கவில்லை.
இது சம்பந்தமாக தகவல் வெளியிட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் ஒருவர்,
விஜயகலா மகேஸ்வரனின் கணவரான படுகொலை செய்யப்பட்ட தி. மகேஸ்வரன், கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் இடையில் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல் சேவை ஒன்றை நடத்தி வந்தாக குறிப்பிட்டார்.
தம்மிக்க பெரேராவே, தி. மகேஸ்வரனின் வர்த்தக பங்காளியாக இருந்துள்ளார்.
அத்துடன் விஜயகலா மகேஸ்வரன் தற்போது கொழும்பு - யாழ் இடையில் ஆடம்பர பஸ் போக்குவரத்து சேவையை நடத்தி வருவதுடன் அதற்கான சகல அனுசரணையும் போக்குவரத்து அமைச்சின் செயலாளரான தம்மிக்க பெரேரா வழங்கி வருகிறார்.
இதனால் தம்மிக்க பெரேராவின் வர்த்தக திட்டம் ஒன்றுக்கு விஜயகலாவால் எதிராக வாக்களிக்க முடியாது.
அதேபோல் புத்திக பத்திரண, தனது மாமனாரான ஜனாதிபதி சட்டத்தரணி ஹேமந்த வர்ணகுலசூரிய ஊடாக கசினோ வர்த்தகர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டுள்ளதுடன், தம்மிக்க பெரேராவிடம் இருந்து மாதம் ஊதியம் பெறும் நபர்களின் பட்டியலில் இருக்கும் நபர் என்பதால், அவரும் எதிராக வாக்களிக்க முடியாத நிலையில் அதில் இருந்து நழுவிக் கொண்டுள்ளதாக அந்த சிரேஷ்ட தலைவர் கூறியுள்ளார்.
இந்த தகவல்களை சிங்கள இணையத்தளம் ஒன்று வெளியிட்டிருந்தது.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXfp4.html
போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது பாலியல் வன்முறை! இலங்கை பொறுப்புக்கூற வேண்டும்!- ஐ.நா.சபை
[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 01:54.08 AM GMT ]
இலங்கையில் இறுதிப் போரின் போது தமிழ்ப் பெண்கள் மீது மேற்கொள்ளப்பட்ட பாலியல் வன்முறைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபை தீவிரமான அவதானத்தை செலுத்தி வருகிறது.
இந்த விடயத்தில் இலங்கை தமது பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை எதிர்ப்பார்ப்பதாக போரின் போது பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதி பங்குரா தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் செய்தியாளர் சந்திப்பு நேற்று இடம்பெற்ற போது இன்னர் சிட்டி பிரஸ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பங்குரா இந்த கருத்தை வெளியிட்டார்.
இலங்கைப் போரின் போது தமிழ் பெண்கள் இலக்கு வைத்து பாலியல் வன்முறைகளுக்கு உள்ளாக்கப்பட்டமை கொடுமையான செயல்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி பாலித கோஹனவிடம் விரிவாக கலந்துரையாடியுள்ளதாக பங்குரா குறிப்பிட்டார்.
இந்த விடயத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறலை இதன்போது வலியுறுத்தியுள்ளதாக பங்குரா தெரிவித்தார்.
இந்தநிலையில் இறுதிப்போர் தொடர்பாக சட்டத்தரணி யஸ்மின் சூக்கா வெளியிட்டுள்ள அறிக்கை தொடர்பில் அவரை நியூயோர்க்குக்கு அழைத்து விபரங்களை அறியவுள்ளதாகவும் பங்குரா குறிப்பிட்டார்.
சூக்காவின் அறிக்கையில் போரின் போது தமிழ்ப் பெண்கள் பாதிக்கப்பட்டமை குறித்து விரிவான தகவல்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன.
போரின் போது பாலியல் வன்முறைகள்: ஐநாவின் பட்டியலில் இலங்கை உள்ளடக்கம்
ஐக்கிய நாடுகள் சபையின் புதிய அறிக்கை ஒன்றில் இலங்கை உட்பட்ட 21 நாடுகள், நடப்பு மற்றும் அண்மைய போரின் போது பாலியல் வன்முறைகள் இடம்பெற்ற நாடுகள் பட்டியலில் பெயரிடப்பட்டுள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இந்த அறிக்கையை நேற்று நியூயோர்க்கில் வெளியிட்டார்.
இந்தப்பட்டியலில் இலங்கை, மியன்மார், ஆப்கானிஸ்தான், சிரியா உட்பட்ட நாடுகள் உள்ளடங்குவதாக போரின் போது பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் சிறப்பு பிரதிநிதி ஸைனாப் ஹாவா பங்குரா தெரிவித்துள்ளார்.
நியூயோர்க்கில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXgwy.html

Geen opmerkingen:

Een reactie posten