தொலைக்காட்சி

தொலைக்காட்சி

dinsdag 29 april 2014

சிங்கள பௌத்த அமைப்புகளுக்கு எதிராக ஒரே நாளில் 280 முறைப்பாடுகள்



ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில், மத விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள்வதற்காக விசேட பொலிஸ் பிரிவு ஆரம்பிக்கப்பட்ட ஒரே நாளில் 300 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் பௌத்த தீவிரவாத அமைப்புக்கள், சிறுபான்மை மதங்கள் மீது மேற்கொண்டு வரும் வன்முறைகள் அதிகரித்துக் கொண்டே உள்ளன.
இந்த நிலையில், மத விவகாரங்கள் தொடர்பான பிரச்சினைகளைக் கையாள, விசேட பொலிஸ் பிரிவு ஒன்று நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பௌத்த கலாசார அமைச்சின் கீழ், இந்தப் புதிய பொலிஸ் பிரிவு 16 அதிகாரிகளுடன் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
பொலிஸ் பிரிவு ஆரம்பித்து வைக்கப்பட்டவுடனேயே முதலாவது முறைப்பாட்டினை, சிங்கள ராவய அமைப்பு முஸ்லிம்களுக்கு எதிராக பதிவு செய்தது.
இதையடுத்து, சிங்கள பௌத்த அமைப்புகளுக்கு எதிராக, முஸ்லிம்களால் 280 நேற்று முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
அதேவேளை, பௌத்த அமைப்புகளினால் 3 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
 பொலிஸ் மீதிருந்த நம்பிக்கையை இழந்து விட்டோம்- அஸாத் சாலி
முஸ்லிம்களுக்கு எதிராக இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில், மத்திய மாகாணசபை உறுப்பினரும், தேசிய ஐக்கிய முன்னணி தலைவருமான அஸாத் சாலி 284 முறைப்பாடுகளை விசேட பொலிஸ் பிரிவில் பதிவு செய்துள்ளார்.
விசேட பொலிஸ் பிரிவுக்கு சென்று முறைப்பாட்டினைப் பதிவு செய்த பின்னர் அவர் கருத்து வெளியிடுகையில்,
வன்முறைச் சம்பவங்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்படாததல், நாங்கள் பொலிஸ் மீதிருந்த நம்பிக்கையினை இழந்து விட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERdLXex2.html

Geen opmerkingen:

Een reactie posten