நேற்று முன்தினம் காலை பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பிரதமர் மன்மோகன் சிங், ‘நாட்டில் மோடி அலை என்று ஏதுமில்லை’ என்று தெரிவித்திருந்த நிலையில், அவரது சகோதரர் பா.ஜ.க.வில் சேர்ந்தது பிரதமரின் குடும்பத்தாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநில தலைநகர் அமிர்தசரசில் நேற்று பா.ஜ.க. தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி முன்னிலையில் பிரதமர் மன்மோகன் சிங்கின் சகோதரர் தல்ஜித் சிங் கோலி பா.ஜ.க.வில் இணைந்தார்.
இது தொடர்பாக கருத்து கூறிய பிரதமர் அலுவலக வட்டாரங்கள், ‘அவர் பா.ஜ.க.வில் இணைந்ததன் நோக்கம் என்னவென்று தெரியவில்லை. ஆனால், தனக்கு பிடித்தமான கட்சியை தேர்வு செய்ய அவருக்கு உரிமை உண்டு’ என்று தெரிவித்துள்ளன.
ஒரே ஆண் குழந்தையாக மன்மோகன் சிங்கையும், ஆறு பெண் குழந்தைகளையும் பெற்றெடுத்த அவரது தாயார் மிக குறைந்த வயதில் இறந்து விட்டதாகவும், அவரது மறைவுக்குப் பிறகு பிரதமரின் தந்தை இன்னொரு திருமணம் செய்து கொண்டதாகவும், பா.ஜ.க.வில் இணைந்த தல்ஜித் சிங் கோலி இரண்டாவது மனைவிக்கு பிறந்தவர் என்றும் ஒரு தரப்பினர் விளக்கம் அளித்தனர்.
http://www.jvpnews.com/srilanka/66954.html
Geen opmerkingen:
Een reactie posten