தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்கைள பலப்படுத்த சில நாடுகள் முயற்சித்து வருவதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள பதினாறு வெளிநாட்டு புலி ஆதரவு அமைப்புக்களை பலப்படுத்த அமெரிக்கா, கனடா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தடை செய்யப்பட்ட அமைப்புக்களை மீள செயற்படுத்த கனடா முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இலங்கைக்கு எதிராக சுயாதீன விசாரணைகளை நடாத்தும் நோக்கில் அமெரிக்காவும், பிரிட்டனும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளன.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அடுத்த மாதத்தில் விசாரணைகள் நடத்தப்பட உள்ளன.
இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் நோக்கில் புலி ஆதரவு அமைப்புக்களை பலப்படுத்த குறித்த நாடுகள் முயற்சிப்பதாக சிங்களப் பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
http://www.tamilwin.com/show-RUmsyEQULYnp2.html
Geen opmerkingen:
Een reactie posten