மக்களவைத் தேர்தல் தொடர்பாக உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள சுல்தான்பூர் நகரில் பல்வேறு அரசியல் தலைவர்கள் பங்கேற்ற நேரடி தொலைக்காட்சி விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது திடீரென கமெரா முன்பு வந்த ஒரு வாலிபர் தன் உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்துக்கொண்டார்.
அதோடு நில்லாமல் அலறிக்கொண்டே ஓடி, நிகழ்ச்சிக்கு வந்திருந்த பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் கம்ருசம்மா பாஜியை கட்டிப்பிடித்துள்ளார்.
இதனால் இருவரும் தீயில் கருகியுள்ளனர். இதனையடுத்து உடனடியாக அவர்கள் இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தீக்குளித்த அந்த வாலிபருக்கு 95 சதவீத தீக்காயங்களும், பாஜிக்கு 75 சதவீத தீக்காயங்களும் ஏற்பட்டுள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், அவர்களைக் காப்பாற்ற முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் ராம் குமார் சிங், தலைவர் சவுத்ரி ஹரிடே ராம் வர்மா ஆகியோருக்கும் லேசான தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுபற்றி விசாரித்து வரும் பொலிசார், தீக்குளித்த நபர் மாவ் மாவட்டத்தைச் சேர்ந்த துர்கேஷ் என்றும், அவர் ஏன் இந்த அளவுக்கு வெறித்தனமாக நடந்துகொண்டார் என இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.
http://www.newindianews.com/view.php?224MM303lOS4e2DmKcb240Mdd304ybc2mDDe43OlR0226AA3 |
Geen opmerkingen:
Een reactie posten