தொலைக்காட்சி

தொலைக்காட்சி

woensdag 23 april 2014

இலங்கை அகதியின் கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலிய நீதிமன்றம்

இலங்கை உறவுகள் மேலும் வலுவடையும் – அவுஸ்திரேலியா குடிவரவு அமைச்சர்

சட்ட ரீதியான முறையில் அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்கும் இலங்கையர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். இது ஓர் ஆரோக்கியமான மாற்றம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க நியாயமான காரணங்கள் இருந்தால் அவர்களுக்கு நிச்சமாக சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும், ஆபத்தான கடல் வழியப் பயணங்களை தெரிவு செய்வதனை தவிர்க்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளை தடுக்க இலங்கை அரசாங்கம் ஒத்துழைப்பு வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார்.
http://www.jvpnews.com/srilanka/66587.html

இலங்கை அகதியின் கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலிய நீதிமன்றம்

1974ம் ஆண்டு இலங்கை இந்திய உடன்படிக்கையின் அடிப்படையில் தாம் இந்திய குடியுரிமைப் பெற்றுக்கொண்டதாகவும் பின்னர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார். 1996ம் ஆண்டு யுத்தம் காரணமாக இந்திய கடவுச் சீட்டு எதுவுமின்றி இந்தியாவிற்குள் பிரவேசித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.இந்தியாவிற்குள் பிரவேசித்த தம்மை பல்வேறு அகதி முகாம்களில் தங்க வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
குறித்த நபரின் புதல்வர் அவுஸ்திரேலியாவிற்கு ஆட்களை அனுப்பி வைப்பதாகத் தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.வெளிநாட்டவர் சட்டத்தின் கீழ் மகனை விடுதலை செய்யுமாறு கோரிய போதிலும் நீதிமன்றம் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொள்ளவில்லை.
http://www.jvpnews.com/srilanka/66591.html

Geen opmerkingen:

Een reactie posten