[ வெள்ளிக்கிழமை, 25 ஏப்ரல் 2014, 07:30.40 PM GMT ]
பாராளுமன்றத்தின் இன்று வெள்ளிக்கிழமை அமர்வின் போது இடம்பெற்ற செயல் நுனுக்க அபிவிருத்தி கருத்திட்டத்தின் கீழான கட்டளை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
சுமந்திரன் எம்.பி இங்கு மேலும் கூறுகையில்,
அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மேற்படி கட்டளையான கசினோ சூதாட்டத்தை கொண்டதான நிகழ்ச்சி நிரல் இல்லை என்று இங்கு அமைச்சர்களால் கூறப்படுகின்றது.
அத்துடன் இவ்விடயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் பல்வேறு கதைகளைக் கூறி மக்களை திசை திருப்புவதாகவும் அமைச்சர்கள் கூறுகின்றனர்.
எனினும் மாநாயக்க தேரர்களே இவ்விடயத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதனை திருத்தியமைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். ஆகவே தான் மனச்சாட்சி உள்ள ஆளும் கட்சி உறுப்பினர் சூதாட்டத்தைக் கொண்ட பிரேரணை மீதான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அத்துடன் நின்று விடாது ஆளும் கட்சியின் பங்காளியான அத்துரலியே ரத்ன தேரர் எதிர்த்து வாக்களித்தார்.
இந்நாட்டில் கடைப்பிடிக்கப்படுகின்ற நான்கு மதங்களுமே சூதாட்டத்தை வெறுக்கின்றன.
சூதாட்டத்தின் மூலம் மனைவியை இழந்தமை, சொத்துக்களை இழந்தமை, சகோதரங்களுக்கிடையே கொலைகள் இடம்பெற்றமை என்பவற்றை வரலாறுகள் கூறுகின்றன.
http://www.tamilwin.com/show-RUmsyERZLXfq5.html
மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: ரவூப் ஹக்கீம்
[ சனிக்கிழமை, 26 ஏப்ரல் 2014, 02:48.38 AM GMT ]
சில அமைப்புக்கள் எவ்வாறான பிரச்சினைகளை நாட்டில் ஏற்படுத்த முயற்சித்தாலும், நாட்டில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்த சகல வழிகளிலும் முயற்சிக்கப்படும்.
வில்பத்து வனவிலங்கு சரணாலயத்தில் மக்கள் குடியேறியிருந்தால் அவர்களுக்கு மாற்று இடங்கள் வழங்கப்பட வேண்டும்.
நாட்டை கட்டியெழுப்புவதற்கு அனைத்து தரப்பினரதும் ஒத்துழைப்பு அவசியமாகின்றது.
சட்டத்திற்கு முரணான வகையில் ஏதேனும் இடம்பெற்றிருந்தால் அதற்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடர அனைவருக்கும் அதிகாரமுண்டு.
இதேவேளை, வட்டரக்கே விஜித தேரருக்கு அமைச்சர் பதியூதீன் அடைக்கலம் வழங்கியதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை.
நாட்டின் அரசியல் தலைவர்களில் ஒருவர் என்ற ரீதியில் அவ்வாறு பௌத்த பிக்கு ஒருவருக்கு அடைக்கலம் வழங்குவதிலும் தவறில்லை எனவும் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்துள்ளார்.
http://www.tamilwin.com/show-RUmsyERaLXfr2.html
Geen opmerkingen:
Een reactie posten